கபூர்தலா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கபூர்தலா
ਕਪੂਰਥਲਾ ਜ਼ਿਲ੍ਹਾ
மாவட்டம்
பஞ்சாப் மாநிலத்தில் கபூர்தலா மாவட்ட அமைவிடம், இந்தியா
பஞ்சாப் மாநிலத்தில் கபூர்தலா மாவட்ட அமைவிடம், இந்தியா
நாடு  இந்தியா
மாநிலம் பஞ்சாப்
Named for நவாப் கபூர் சிங்
Headquarters கபுர்தலா
பரப்பளவு
 • மொத்தம் 1
மக்கள்தொகை (2011)‡[›]
 • மொத்தம் 815
 • அடர்த்தி 500
இனங்கள் பஞ்சாபியர்
மொழிகள்
 • அலுவல் மொழி பஞ்சாபி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
எழுத்தறிவு 79.07 %
இணையதளம் www.kapurthala.net.in

கபூர்தலா மாவட்டம் (Kapurthala district) (பஞ்சாபி|ਕਪੂਰਥਲਾ ਜ਼ਿਲ੍ਹਾ) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் கபுர்த்தலா ஆகும்.

கபூர்தலா மாவட்டத்தின் நிலப்பரப்புகள் ஜலந்தர் மாவட்டத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ளது.

இம்மாவட்டத்தில் பியாஸ் ஆறு மற்றும் சத்லஜ் ஆறுகள் பாய்கிறது. இம்மாவட்டத்தின் பொருளாதாரம் கோதுமை, நெல், கரும்பு, உருளைக்கிழங்கு போன்ற வேளாண் விளைபொருட்களைச் சார்ந்துள்ளது.

இம்மாவட்டம் கோடைக்காலத்தில் கடும் வெப்பமும்; குளிர்காலத்தில் கடும் குளிரையும் கொண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் கபூர்தலா, பக்வாரா மற்றும் சுல்தான்பூர் லோடி என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 815,168 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 65.35% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 34.65% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 8.04% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 426,311 ஆண்களும் மற்றும் 388,857 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 912 வீதம் உள்ளனர். 1,633 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 499 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 79.07 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 83.15 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 74.63 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 86,025 ஆக உள்ளது. [1]

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் சீக்கிய சமய மக்கள் தொகை 453,692 (55.66 %) ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 336,124 (41.23 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 10,190 (1.25 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த, சமண சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.

மொழிகள்[தொகு]

பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கபூர்தலா_மாவட்டம்&oldid=2142225" இருந்து மீள்விக்கப்பட்டது