குர்தாஸ்பூர் மாவட்டம்
குர்தாஸ்பூர் மாவட்டம்
ਗੁਰਦਾਸਪੁਰ ਜ਼ਿਲ੍ਹਾ | |
---|---|
மாவட்டம் | |
பஞ்சாபில் குர்தாஸ்பூர் மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
தலைமையிடம் | குர்தாஸ்பூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,551 km2 (1,371 sq mi) |
மக்கள்தொகை (2011)‡[›] | |
• மொத்தம் | 22,98,323 |
• அடர்த்தி | 647/km2 (1,680/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
இணையதளம் | gurdaspur |
குர்தாஸ்பூர் மாவட்டம் (Gurdaspur district), வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் குர்தாஸ்பூர் ஆகும். மக்கள் தொகை அடிப்படையில் இம்மாவட்டம், பஞ்சாப் மாநிலத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் ராவி ஆறு மற்றும் பியாஸ் ஆறுகள் பாய்கிறது.
மாவட்ட எல்லைகள்
[தொகு]இம்மாவட்டத்தின் வடக்கில் பதான்கோட் மாவட்டம், வடகிழக்கில் இமாசலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டம், கிழக்கில் இமாசலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டம், தென்கிழக்கில் ஹோசியார்பூர் மாவட்டம், தெற்கில் அமிர்தசரஸ் மாவட்டம், வடமேற்கில் பாகிஸ்தான் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் குர்தாஸ்பூர், படாலா, தேரா பாபா நானக் என மூன்று வருவாய் வட்டங்களையும்; குர்தாஸ்பூர், கலானௌர், தாரிவால், படாலா, கனுவான், தீனாநகர், பதேகர் சுரியன், தேரா பாபா நானக், ஸ்ரீஹரிகோவிந்தபூர், குவாடியன், தோராங்கிலா என 12 ஊராட்சி ஒன்றியங்களையும்; குர்தாஸ்பூர், தாரிவால், தீனாநகர், படாலா, ஸ்ரீஹரிகோவிந்தபூர், தேரா பாபா நானக், பதேகர் சுரியன், குவாடியன் என எட்டு நகராட்சிகளை கொண்டுள்ளது.
அரசியல்
[தொகு]இம்மாவட்டம் குர்தாஸ்பூர், தீனாநகர், படாலா, ஸ்ரீஹரிகோவிந்தபூர், பதேகர் சுரியன், தேரா பாபா நானக், குவாடியன் என ஏழு சட்டமன்ற தொகுதிகளையும்; குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,298,323 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 71.31% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 28.69% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 9.26% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,212,617 ஆண்களும் மற்றும் 1,085,706 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 895 பெண்கள் வீதம் உள்ளனர். 3,551 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 647 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 79.95 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 84.56 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 74.85 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 253,579 ஆக உள்ளது. [1]
சமயம்
[தொகு]இம்மாவட்டத்தில் சீக்கிய சமய மக்கள் தொகை 1,002,874 (43.64 %) ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,074,332 (46.74 %) ஆகவும், கிறித்தவ மக்கள் தொகை 176,587 (7.68 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 27,667 (1.20 %) ஆகவும், பௌத்த, சமண சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.
மொழிகள்
[தொகு]பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]Business directory of Gurdaspur பரணிடப்பட்டது 2012-04-19 at the வந்தவழி இயந்திரம்