உள்ளடக்கத்துக்குச் செல்

பெரோஸ்பூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரோஸ்பூர்
ਫ਼ਿਰੋਜ਼ਪੁਰ ਜ਼ਿਲ੍ਹਾ
மாவட்டம்
பஞ்சாப் மாநிலத்தின் வடமேற்கில் பெரோஷ்பூர் மாவட்ட அமைவிடம்
இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
பெயர்ச்சூட்டுபெரோஷா துக்ளக்
தலைமையிடம்பெரோஸ்பூர்
பரப்பளவு
 • மொத்தம்5,305 km2 (2,048 sq mi)
மக்கள்தொகை
 (2011)‡[›]
 • மொத்தம்20,29,074
 • அடர்த்தி380/km2 (990/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
படிப்பறிவு69.80%
கிராமங்கள்639
மக்களவைத் தொகுதி1
சட்டமன்றத் தொகுதி4
முக்கிய நகரங்கள்10
இணையதளம்www.ferozepur.nic.in

பெரோஸ்பூர் மாவட்டம் (Firozpur district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பெரோஸ்பூர் ஆகும். இம்மாவட்டத்தின் பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் அமைந்த உசைனிவாலா கிராமத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான பகத்சிங், சுக்தேவ் தாப்பர் மற்றும் சிவரம் ராச்குரு ஆகியோரின் நினைவாக நிறுவப்பட்ட உசைனிவாலா தேசிய தியாகிகள் நினைவிடம் உள்ளது.[1]

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,026,831 ஆக உள்ளது.[2][3] கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 16.08% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்களும் மற்றும் பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 893 பெண்கள் வீதம் உள்ளனர். 5305 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 380 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 69.80% ஆக உள்ளது.

மொழிகள்

[தொகு]

பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் சீக்கியர்கள் 53.76%; இந்துக்கள் 44.67%; கிறித்தவர்கள் 0.95%; இசுலாமியர்கள் 0.28% ஆக உள்ளனர். பிற சமயத்தினர் குறைவாக உள்ளனர்.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

இம்மாவட்டம் பெரோஸ்பூர், சிரா, குரு ஹர் சகாய் என மூன்று வருவாய் வட்டங்களையும்; பெரோஸ்பூர், கால் கர்டு, குரு ஹர் சகாய், மாக்கு, மம்தோத், சிரா என ஆறு ஊராட்சி ஒன்றியங்களையும்; பெரோஷ்பூர், தல்வண்டி பாய், மாக்கு, குரு ஹர் சகாய், சிரா, மம்தோத், பெரோஷ்பூர் பாசறை நகரம், மல்லன்வாலா, மூட்கி, கால் கர்டு என பத்து நகராட்சிகளையும் கொண்டுள்ளது.

அரசியல்

[தொகு]

இம்மாவட்டம் பெரோஸ்பூர், பெரோஸ்பூர் (கிராமப்புறம்), குரு ஹர் சகாய் மற்றும் சிரா என நான்கு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. The National Martyrs Memorial, Hussainiwala Border
  2. Population - Firozpur Online
  3. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரோஸ்பூர்_மாவட்டம்&oldid=3890705" இலிருந்து மீள்விக்கப்பட்டது