சுக்தேவ் தபார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரின் சிலைகள்
சுக்தேவ் தபார்
பிறப்பு: மே 15, 1907
பிறந்த இடம்: லயால்பூர், லூதியானா, பஞ்சாப், இந்தியா
இறப்பு: மார்ச் 23, 1931
இறந்த இடம்: லாகூர், பஞ்சாப், இந்தியா
இயக்கம்: இந்திய விடுதலைப் போராட்டம்
முக்கிய அமைப்புகள்: நாவுஜவான் பாரத் சபா, கீர்த்தி கிசான் கட்சி மற்றும் இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு

சுக்தேவ் தபார் அல்லது சுக்தேவ் (15 மே 1907 - மார்ச் 23, 1931 (பஞ்சாபி: ਸੁਖਦੇਵ ਥਾਪਰ, سُکھدیو تھاپر) பஞ்சாப் மாநில லூதியானாவில் பிறந்த இந்திய விடுதலை போராளி. பிரித்தானிய காவல்துறை அதிகாரியான சான்டர்சு மற்றும் அவர் கீழுள்ள சில அதிகாரிகள் லாலா லஜபத் ராய் என்ற விடுதலை போராட்டக்காரரை அடித்துக்கொன்றனர். அதற்கு பலி வாங்குவதற்காக சுக்தேவ் அவருடையக் கூட்டாளிகளான பகத்சிங், சிவராம் ராஜ்குரு போன்றோருடன் சேர்ந்து சான்டர்சு பதில் கொலை செய்ததற்காக அதிகம் அறியப்பட்டவர்.

இக்கொலைவழக்கில் இம்மூன்று பேரும் லாகூர் மத்திய சிறையில் மார்ச் 23, 1931ல் தூக்கிலிடப்பட்டு, எவரும் அறியாமல் இருப்பதற்காக சிறைக்கு பின் பக்கமாக கடத்தப்பட்டு லாகூரிலிருந்து 50 மைல் தொலைவிலுள்ள சட்லஜ் ஆற்றாங்கரையில் எரியூட்டப்பட்டனர்.

பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை[தொகு]

சுக்தேவ், பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மாவட்டத்தில், லயால்பூரியில் மே 15 , 1907 ஆம் நாள் பிறந்தார். அவரது தந்தையார் பெயர் ராம் லால் தாப்பர். லயால்பூர் தன்பத்மல் ஆரியா பள்ளியில் ஏழாவது வகுப்புவரை பயின்றார். பின்னர், சனாதன உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்தார்.

இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்ற இயக்கத்தில் சேர்ந்து, இந்திய விடுதலை போராளி ஆனார்.

காந்தியின் ஒப்புதல்[தொகு]

இம்மூவரின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டது போலவும், தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற இந்தி திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்புதல் அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது. இதற்கான ஆதாரம் ஃபிரன்ட் லைன் பத்திரிக்கையில் உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-06-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-03-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்தேவ்_தபார்&oldid=3245178" இருந்து மீள்விக்கப்பட்டது