பாபா ஆம்தே
Jump to navigation
Jump to search
முரளிதர் தேவதாசு ஆம்தே | |
---|---|
பிறப்பு | 26 டிசம்பர், 1914 இங்கன்காட், மகாராட்டிரம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 9 பெப்ரவரி 2008 ஆனந்தவன், மகாராட்டிரம், இந்தியா | (அகவை 93)
தேசியம் | இந்தியா |
வாழ்க்கைத் துணை | சாதனா ஆம்தே |
பிள்ளைகள் | மரு. விகாசு ஆம்தே மரு. பிரகாசு ஆம்தே |
பாபா ஆம்தே எனப் பரவலாக அறியப்பட்ட முரளிதர் தேவதாசு ஆம்தே (மராத்தி: बाबा आमटे) (டிசம்பர் 26, 1914 – பெப்ரவரி 9, 2008) ஓர் இந்திய சமூக சேவகர், செயற்பாட்டாளர். இவர் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிப்பதில் அக்கறை காட்டினார்.
வழக்கறிஞரான இவர், இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் போராட்டத் தலைவர்களுக்குச் சார்பாக வாதாடினார். காந்தியின் ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கி இருந்த இவர், தனது வாழ்நாள் முழுவதும் காந்தியவாதியாக வாழ்ந்தார்.
மெய்யியல்[தொகு]
தாம் ஒரு தலைவராக இருப்பதை விட, சிறு சிக்கலைத் தீர்க்கக்கூடிய ஒரு பொறியாளனாக இருக்கவே விரும்புவதாகக் கூறினார். காந்தியவாதியான இவர், காந்தியைப் போல் அல்லாமல் இறைமறுப்பாளராக இருந்தார்.
- நான் எனது ஆன்மாவைத் தேடினேன்,
- என்னால் ஆன்மாவைக் காணமுடியவில்லை.
- நான் எனது இறைவனைத் தேடினேன்,
- எனது இறை என்னிடம் இருந்து தப்பிச்சென்றது.
- நான் எனது சகோதர்களைத் தேடினேன்,
- அம்மூவரையும் நான் கண்டுகொண்டேன்.
பெற்ற விருதுகள்[தொகு]
- பத்மசிறீ விருது (1971)
- பத்மவிபூசன் விருது (1986)
- காந்தி அமைதி பரிசு (1993)
- டாமின்-டட்டன் விருது (1983)
- ரமன் மக்சேசே விருது (1985)
வெளி இணைப்புகள்[தொகு]
- www.anandwan.in பரணிடப்பட்டது 2014-12-31 at the வந்தவழி இயந்திரம்