இந்திய ஒன்றியம்
![]() | It has been proposed in this section that இந்திய ஒன்றியம் be renamed and moved to இந்திய மேலாட்சி.
A bot will list this discussion on requested moves' current discussions subpage within half an hour of this tag being placed. The discussion may be closed 7 days after being opened, if consensus has been reached (see the closing instructions). Please base arguments on article title policy, and keep discussion succinct and civil. Please use {{subst:requested move}} . Do not use {{requested move/dated}} directly. |
இந்திய ஒன்றியம் Union of India | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1947–1950 | |||||||||
![]() | |||||||||
நிலை | டொமினியன் | ||||||||
தலைநகரம் | புது டில்லி | ||||||||
பேசப்படும் மொழிகள் | ஆங்கிலம், இந்திய மொழிகள் | ||||||||
அரசாங்கம் | அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி | ||||||||
இந்தியாவின் பேரரசர் | |||||||||
• 1947-50 | ஆறாம் ஜார்ஜ் | ||||||||
தலைமை ஆளுனர் | |||||||||
• 1947-48 | மவுண்ட்பேட்டன் பிரபு | ||||||||
• 1948-50 | ராஜாஜி | ||||||||
பிரதமர் | |||||||||
• 1947-50 | ஜவகர்லால் நேரு | ||||||||
வரலாற்று சகாப்தம் | பனிப்போர் | ||||||||
ஆகஸ்ட் 15 1947 | |||||||||
1947-48 | |||||||||
ஜனவரி 26 1950 | |||||||||
நாணயம் | இந்திய ரூபாய் | ||||||||
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | IN | ||||||||
|
இந்திய ஒன்றியம் அல்லது இந்திய ஐக்கியம் (இந்தியன் யூனியன், Indian Union) அல்லது இந்திய மேலாட்சி அரசு (இந்திய டொமினியன், Dominion of India) ஆகஸ்ட் 15 1947க்கும் ஜனவரி 26 1950க்கும் இடையில் நிலவிய ஒரு கட்டற்ற நாடாகும். ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 1947 ஆம் ஆண்டின் இந்திய விடுதலைச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட கட்டற்ற இரண்டு மேலாட்சி அரசுகளில் இந்திய ஒன்றியமும் ஒன்றாகும். 1950 இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்பால் குடியரசாக மாற்றப்பட்டது.[1]
ஐக்கிய இராச்சியத்தின் வேந்தரான ஆறாம் ஜார்ஜ் முழு இந்தியாவுக்கும் மன்னராக இருந்தார். அரசுத் தலைவராக இந்தியாவின் தலைமை ஆளுனரும் (கவர்னர் ஜெனரல்), பிரதமரும் இருந்தனர். கவர்னர் ஜெனரல் வைஸ்ராயாக நியமிக்கப்படவில்லை. பிரித்தானிய இராச்சியத்தின் கீழ் வழக்கமாக இருந்தது. வைஸ்ராய் அலுவலகம் சுதந்திரத்திற்கு பின்னர் இரத்து செய்யப்பட்டது. விடுதலைக்கும் இந்தியா குடியரசாக மாற்றப்படுவதற்கும் இடையில் மவுண்ட்பேட்டன் பிரபு (1947-48) மற்றும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1948-50) ஆகிய இரண்டு கவர்னர் ஜெனரல்கள் பதவி வகித்தனர்:. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தார்.
சட்டத்துறைப் பயன்பாடு[தொகு]
இந்திய அரசிலமைப்பின் 300வது பிரிவில் ”இந்திய அரசின் மீது வழக்குத் தொடுப்போர் இந்திய ஒன்றியம் என்ற பெயரைப் பயன்படுத்தலாம், அரசும் இப்பெயரைக் கொண்டு வழக்கு தொடுக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியக் குடியரசின் நீதிமன்றங்களில் “இந்திய ஒன்றியம்” / ”இந்தியன் யூனியன்” என்ற பெயர் இந்திய அரசினைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. (எ.கா. எஸ். ஆர். பொம்மை எதிர் இந்திய ஒன்றியம்)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Winegard, Timothy C. (2011), Indigenous Peoples of the British Dominions and the First World War, Cambridge University Press, pp. 2–, ISBN 978-1-107-01493-0