உள்ளடக்கத்துக்குச் செல்

யுகாந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜுகாந்தர் அல்லது யுகாந்தர் (வங்காள மொழி: যুগান্তর) இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் வங்காளத்தில் செயல்பட்ட ஒரு புரட்சி இயக்கம். ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தருவதே இதன் குறிக்கோள். அனுசீலன் சமித்தி என்ற புரட்சி அமைப்பிலிருந்து பிரிந்து 1906ஆம் ஆண்டு உருவானது. அரவிந்தர், அவரது சகோதரர் பாரின் கோஷ், பூபேந்திரநாத் தத்தர், ராஜா சுபோத் மாலிக் ஆகியோர் இதனைத் தொடங்கினர். இவ்வமைப்பும் அனுசீலன் சமித்தியும் புறநகர் உடற்பயிற்சி கழகங்கள் என்ற போர்வையில் பிரித்தானிய அரசுக்கு எதிராக ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அலிப்பூர் வெடிகுண்டு சதி வழக்கு, இந்து-ஜெர்மானிய சதி ஆகிய புரட்சி நடவடிக்கைகளில் யுகாந்தர் ஈடுபட்டது. இதன் பல உறுப்பினர்கள் காலனிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் இவ்வியக்கம் முடக்கப்பட்டு சிறு குழுக்களாகப் பிளவுண்டது. 1920ஆம் ஆண்டு யுகாந்தர் உறுப்பினர்கள் விடுதலையை அடைய வன்முறைப் பாதையைக் கைவிட்டனர். இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டனர். 1930களில் மீண்டும் சில ஆண்டுகள் வன்முறை வழிகளில் ஈடுப்பட்டு பின் 1938 இல் காங்கிரசில் இணைந்து விட்டனர்.

ஜுகாந்தர் இயக்கத்தின் குறிப்பிடதக்கவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுகாந்தர்&oldid=3813009" இலிருந்து மீள்விக்கப்பட்டது