பூபேந்திரநாத் தத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூபேந்திரநாத் தத்தர்
Bhupendranath Datta (brother of Swami Vivekananda).png
பிறப்புசெப்டம்பர் 4, 1880(1880-09-04)
கல்கத்தா
இறப்பு25 திசம்பர் 1961(1961-12-25) (அகவை 81)
தேசியம்இந்தியா
பணிசுதந்திரப் போராட்ட வீரர்
உறவினர்கள்சுவாமி விவேகானந்தர் (மூத்த சகோதரர்)

பூபேந்திரநாத் தத்தர் (4 செப்டம்பர் 1880 – 25 டிசம்பர் 1961) இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். ஜுகாந்தர் (அல்லது யுகாந்தர்) என்ற புரட்சி அமைப்பின் பத்திரிக்கையான ஜுகாந்தர் பத்திரிக்கையின் ஆசிரியராக 1907 இல் தான் கைதாகும் முன்பு வரை இருந்தார். இவர் விசுவநாத் தத்தருக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவரது மூத்த சகோதரர்கள் நரேந்திரநாத் தத்தர் (பின்னாளில் சுவாமி விவேகானந்தர்) மற்றும் மகேந்திரநாத் தத்தர்.[1] இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பொதுவுடைமைக் கொள்கைகளுக்காகப் போராடியவர்.அரவிந்தருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

இவர் குறிப்பிடத்தக்க புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் குடும்பத்தில் சகோதரர்கள் மூவருமே திருமணம் செய்துகொள்ளவில்லை. வாரிசு இல்லாத இவர்களது வீடு பலராலும் உரிமை கொண்டாடப்பட்டு பின்னர் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 இல் சுவாமி விவேகானந்தரின் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு ராமகிருஷ்ண மிஷனின் கிளையாக அங்கு பல்வேறு மக்கள் நலப்பணிகள் நடைபெற்று வருகின்றன.[2]

இவரது பெயரில் அரசு உதவி பெறும் கல்லூரி இயங்கி வருகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 http://www.dbndsm.edu.in
  2. சுவாமி விவேகானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு; பக்கம் 20-21; (அடிக்குறிப்பு)