சுவராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மகாத்மா காந்தி (வலது)

சுவராஜ் (Swaraj) என்ற இந்தி மொழிச் சொல் பொதுவாக தன்னாட்சியைக் குறித்த போதும் [1] மகாத்மா காந்தி இதனை உள்ளாட்சி என்ற பொருளில் பயன்படுத்தினார்.[2] [3] காந்தியின் கருத்தாக்கத்தின்படி புதிய இந்திய அரசு படிநிலையில் அமைந்த அரசாக இல்லாது தனிநபர் மற்றும் சமூகக் கட்டமைப்புகளின் தன்னாட்சி மூலம் ஆளப்படுவதை விரும்பினார். அரசியல் அதிகாரம் மையப்படுத்தப்படாது அதிகாரப் பரவல் இதன் முதன்மை குவியமாக இருந்தது.[4] இந்தக் காந்தியின் கருத்தாக்கம் பிரித்தானிய அரசியல் மற்றும் சமூக அமைப்புகளுக்கு எதிராக இருந்தமையால் பிரித்தானியரால் நிறுவப்பட்ட அரசியல், பொருளியல், நிர்வாக, சட்ட, இராணுவ மற்றும் கல்வி அமைப்புகளை கைவிடக் கூறினார்.[5]

காந்தியின் இக்கருத்தாக்கம் முழுமையாக இந்தியாவில் பின்பற்றப்படாவிடினும் இதற்காக அவர் நிறுவிய தன்னார்வலர் அமைப்புக்கள் இந்தக் கொள்கையை முன்னெடுத்துச் சென்றன.[6] நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் வரும் முன்பே இக்கொள்கையின்படி அமைந்த வினோபா பாவேயின் நிலக்கொடை இயக்கம் தனிநபர்களால் தாமாகவே தமது கூடுதல் விளைநிலத்தை வறியவர்களுக்குப் பகிர்ந்தளிக்க முன்னோடியாக விளங்கியது. சுவராஜின் தாக்கத்தால் நிலச்சுவான்தார் முறையும் முடிவுக்கு வந்தது.

சான்றுகள்[தொகு]

  1. swa- பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் "self", raj "rule"
  2. Hind Swaraj or Indian Home Rule, Gandhi, 1909
  3. What is Swaraj? பரணிடப்பட்டது 2012-08-31 at WebCite. Retrieved on July 12, 2007.
  4. Parel, Anthony. Hind Swaraj and other writings of M. K. Gandhi. Cambridge University Press. Cambridge, 1997.
  5. What is Swaraj? பரணிடப்பட்டது 2012-08-31 at WebCite. Retrieved on March 3, 2007.
  6. What Swaraj meant to Gandhi. Retrieved on September 17, 2008.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவராஜ்&oldid=3245621" இருந்து மீள்விக்கப்பட்டது