ஆச்சார்ய கிருபளானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜீவிதராம் பகவன்தாஸ் கிருபளானி
பிறப்பு நவம்பர் 11, 1888(1888-11-11)
ஐதராபாத், மும்பை மாகாணம்
இறப்பு மார்ச் 19, 1982 (அகவை 93)
பணி வழக்கறிஞர்
அறியப்படுவது இந்திய விடுதலை இயக்கம்
சமயம் இந்து
வாழ்க்கைத் துணை சுசேதா கிருபளானி

ஆச்சார்ய கிருபளானி என்று அறியப்படும் ஜீவிதராம் பகவன்தாஸ் கிருபளானி (11.11.1888 – 19.03.1982) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் அரசியல்வாதி. இந்திய விடுதலையின் போது காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தவர். பிரதமர் பதவிக்கான நபரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டுக் காங்கிரசு கட்சிக்குள் நடத்தப்பட்ட தேர்தலில் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் அதிகபட்ச வாக்குகளை இவர் பெற்றிருந்தார். எனினும் மோகன்தாசு கரம்சந்த் காந்தி ஜவகர்லால் நேருவைப் பிரதமராக்கினார்.

1970களின் நெருக்கடி நிலைக்குப் பின்னர் இவரது அரசியல் பங்களிப்பு குறைந்து போனது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆச்சார்ய_கிருபளானி&oldid=1428562" இருந்து மீள்விக்கப்பட்டது