ஜெய் ஹிந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திய விடுதலை நாளன்று ஜெய் ஹிந்த் முத்திரையுடன் வெளியிட்ட அஞ்சல் உறை

ஜெய் ஹிந்த் அல்லது ஜெய் இந்த் (Jai Hind) (இந்தி: जय हिन्द), இந்திய விடுதலை இயக்க காலத்தில், அடிமைப்பட்ட கால இந்திய மக்களின் மனதில் நாட்டுப் பற்றை விதைக்கவும், விடுதலை வேட்கையை வளர்க்கவும், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களால், பொது மேடைகளிலும், செய்தித் தொடர்புகளிலும், "ஜெய் ஹிந்த்" என்ற இந்தியாவின் வெற்றிக்கான வீர முழக்கச் சொல் பயன்படுத்தப்பட்டது, ஜெய் ஹிந்த் என்பதன் பொருள் வெல்க இந்தியா என்பதே. [1] இந்தியா நீடுழி வாழ்க என்ற பொருளிலில் பயன்படுத்தப்படுகிறது.[2]இந்தியாவுக்கு வெற்றி (Jai Hindustan Ki) என்பதன் சுருக்கமே ஜெய் ஹிந்த் எனும் சொல்லாகும். இந்த வெற்றி முழக்கச் சொல், சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய இந்தியத் தேசிய இராணுவத்தின் மேஜர் அபித் அசன் சஃப்ரானி என்பவரால் முதன் முதலில் முழக்கமிடப்பட்டது.[3][4]

இந்தியா விடுதலை அடைந்த நாளான ஆகஸ்டு 15, 1947இல், அனைத்து அஞ்சல்களில் ஜெய் ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல் முத்திரையாகப் பதிக்கப்பட்டது.

அனைத்து அகில இந்திய வானொலி நிலையங்களின், நிகழ்ச்சிகளின் இறுதியில் ஜெய் ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல்லைக் கூறி முடிப்பர்.[5]

1947இல் நடந்த பிரித்தானிய அரசி எலிசபத் – பிலிப் திருமணத்திற்கு, மகாத்மா காந்தி தன் கையால், ஜெய் ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல்லைப் பின்னிய சால்வையை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்.[6]

இன்று வரை, ஜெய் இந்த் மற்றும் வந்தே மாதரம் என்பது இந்தியர்கள் தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் ஒரு முழக்கமாக கருதப்படுகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்_ஹிந்த்&oldid=2227844" இருந்து மீள்விக்கப்பட்டது