நவகாளிப் படுகொலைகள்
நவகாளிப் படுகொலைகள் | |
---|---|
![]() நவகாளி மதவாத போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் உரையாடும் இந்தியாவின் தேச தந்தை மகாத்மா காந்தி அவர்கள் | |
இடம் | நவகாளி, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய வங்காளதேசம்) |
நாள் | அக்டோபர் - நவம்பர் 1946 |
தாக்குதலுக்கு உள்ளானோர் | வங்காள இந்துக்கள் |
தாக்குதல் வகை | படுகொலை, கட்டாய மதமாற்றம் |
ஆயுதம் | ராமதாஸ், டிடா, கோச் |
இறப்பு(கள்) | 285[1]; மற்ற ஆதாரங்களின்படி 5,000[2][3] |
தாக்கியோர் | முஸ்லிம் தேசியப் படை, முன்னாள் இரானுவத்தினர், இசுலாமிய அடிப்படைவாத தீவிரவாதிகள் |

நவகாளிப் படுகொலைகள் (Noakhali genocide or Noakhali Carnage,(Bengali: নোয়াখালী গণহত্যা) ) என்பது 1946 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனிநாடு வேண்டி முஸ்லீம் லீக் விடுத்த நேரடி செயல்பாடு அறைக்கூவலையடுத்து வங்காளத்தில் கிளர்ந்து எழுந்த வன்முறை ஆகும். ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்குச் சரியாக ஓராண்டுக்கு முன்பு 1946, அக்டோபர்-நவம்பரில் சிட்டகாங் மாவட்டத்தில் இந்து–இஸ்லாம் மதத்தினருக்கு இடையே பெரும் வன்முறை வெடித்தது.[4] இந்து மதத்தினர் வாழ்ந்த கிராமங்களில் முக்கியமாக நவகாளி மாவட்டம் மற்றும் திப்பெராவில் கொலை, வல்லுறவு, குடும்பங்களைச் சிதைத்தல்; சொத்துகளைச் சூறையாடுதல், கிராமங்கள் ஒட்டுமொத்தமாக கொளுத்தப்படுதல் போன்ற வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின.[2][5] இந்த தாக்குதலில் சரியாக லட்சத்து ஐம்பதாயிரம் இந்துக்களும், பல்லாயிரம் இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டனர். இந்த மதவாத போராட்டத்தை அடிப்படையாக வைத்தே அன்றைய அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னா இஸ்லாமியர்களுக்கு இந்திய பெருநிலத்திலிருந்து பாகிஸ்தானை தனிநாடாக பிரிப்பதற்கான பச்சை விளக்காக இந்த நவகாளி மதவாத போராட்டம் அமைந்தது என கூறப்படுகிறது. மேலும் இக்கோர சம்பவத்தை கண்டு மிகவும் மனம் வருந்திய மகாத்மா காந்தி அவர்கள் நவகாளியை ஒட்டியுள்ள அறுபது கிராமங்களுக்கு நடை பயணம் மேற்கொண்டு அப்போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை கண்டறிந்தார்.[6]அவருடன் எல்லை காந்தி என அழைக்கப்படும் கான் அப்துல் கப்பார் கான் அவர்களும் பயணம் மேற்கொண்டார். இது தான் மகாத்மா காந்தி மேற்கொண்ட நவகாளி யாத்திரை எனப்படுகிறது.[7]
தமிழக எழுத்தாளர் சாவி என்பவர் காந்தியடிகள் மேற்கொண்ட நவகாளி யாத்திரை குறித்த நூல் ஒன்றை, நர்மதா பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ROY, Sukumar (1947). Noakhalite Mahatma (নোয়াখালীতে মহাত্মা) (in Bengali). 9 Shyama Charan Dey Street, Calcutta: Orient Book Company. p. 14.
{{cite book}}
: CS1 maint: location (link) - ↑ 2.0 2.1 "India: Written in Blood". Time. 28 October 1946. p. 42.
Mobs in the Noakhali district of east Bengal ... burned, looted and massacred on a scale surpassing even the recent Calcutta riots. In eight days an estimated 5,000 were killed.
- ↑ Khan, Yasmin (2017) [First published 2007]. The Great Partition: The Making of India and Pakistan (New ed.). Yale University Press. p. 68. ISBN 978-0-300-23032-1.
- ↑ Time. 28 October 1946.
- ↑ "Noakhali Riots - The World Forgotten Noakhali Hindu Massacre 1946". Archived from the original on 2018-09-20. Retrieved 2018-09-23.
- ↑ இந்தியா விடுதலை அடைந்த போது காந்தி எங்கு என்ன செய்து கொண்டு இருந்தார்?
- ↑ https://www.youtube.com/watch?v=mPavIGTWdlQ Mahatma Gandhi: Noa Khali March (1947) - extract | BFI National Archive
- ↑ நவகாளி யாத்திரை
வெளி இணைப்புகள்
[தொகு]- Noakhali genocide பரணிடப்பட்டது 2019-10-28 at the வந்தவழி இயந்திரம்
- Noakhali Noakhali பரணிடப்பட்டது 2012-04-11 at the வந்தவழி இயந்திரம்