உள்ளடக்கத்துக்குச் செல்

துறவிகளின் கிளர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துறவிகளின் கிளர்ச்சி (Sannyasi rebellion or Sannyasi revolt / The monks' rebellion) (வங்காள மொழி: সন্ন্যাসী বিদ্রোহ, வாரணாசி, பத்ரிநாத் போன்ற இந்து சமயப் புனித தலங்களுக்கு யாத்திரைச் செல்லும் இந்துத் துறவிகள் மற்றும் அஜ்மீர் தர்கா போன்ற புனித இடகளுக்கு யாத்திரைச் செல்லும் இசுலாமிய பக்கிரிகளிடம், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியாளர்கள் யாத்திரை வரி வசூலிப்பதை எதிர்த்து, பதினேழாம் நூற்றாண்டில் இறுதியில் வங்காளத்தில் 1770 – 1980-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற துறவிகளின் கிளர்ச்சிகளைக் குறிக்கும்.[1][2][3] [4]

துறவிகளின் இக்கிளர்ச்சி, கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்கு உட்பட்ட வங்காளத்தின் முர்சிதாபாத் மற்றும் ஜல்பைகுரி பகுதியில் உள்ள ராணிகுட் காட்டுப் பகுதிகளில், கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக யாத்திரை வரி வசூலிப்பவர்களுக்கு எதிராக நடைபெற்றது.

1770-ஆம் ஆண்டு வங்காளப் பஞ்சம் மற்றும் 1764 ஆண்டு புக்சார் சண்டை மற்றும் பிளாசி சண்டைகளால் வங்காளத்தில் பசி, பஞ்சம், பட்டினி, வழிப்பறி, கொலை, கொள்ளை, சொத்துக்களை சூறையாடல் நிகழ்வுகள் தொடர்ந்ததால், வங்காளத்தின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இறந்தனர்.[5]இந்நிலையும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு எதிரான துறவிகளின் கிளர்ச்சி காரணமாயிற்று.

துவக்க கால நிகழ்வுகள்

[தொகு]

1771-இல் வங்காளத்தின் நத்தோர் மாவட்டம் மற்றும் ரங்க்பூர் மாவட்டங்களில், கிழக்கிந்திய கம்பெனி படையினரால் 150 துறவிகள் எக்காரணமும் இன்றி கொல்லப்பட்டனர்.

தசநாமி நாக துறவிகளும் மற்றும் பக்கிரிகளும் ஒன்று சேர்ந்து வங்காளத்தின் பிர்பூம், மேற்கு மிட்னாபூர் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் பகுதிகளின் புனித தலங்களுக்கு யாத்திரை செல்கையில், கிழக்கிந்தியக் கம்பெனி படைவீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட போது, துறவிகள் கம்பெனி படைவீரர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர்.

பிரபல கலாசாரத்தில்

[தொகு]

துறவிகளின் கிளர்ச்சிகள் குறித்த வரலாற்றை மையமாகக் கொண்டு, புகழ் பெற்ற வங்காள நூலாசிரியர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, 1882-இல் ஆனந்த மடம் எனும் புதினம் எழுதினார். 1876-இல் பங்கிம் சந்திரர் இயற்றிய வந்தே மாதரம் கவிதையை ஆனந்தமடம் புதினத்தில் சேர்த்துள்ளார். மேலும் இப்புதினத்தை மையமாகக் கொண்டு ஆனந்த மடம் எனும் வங்காள மொழித் திரைப்படம் 1952-இல் வெளி வந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துறவிகளின்_கிளர்ச்சி&oldid=2980360" இலிருந்து மீள்விக்கப்பட்டது