கக்கோரி இரயில் கொள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கக்கோரி இரயில் கொள்ளை (Kakori Conspiracy) சம்பவமானது இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பினரால் இந்திய விடுதலைப்போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆங்கில அரசுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட கொள்ளை சம்பவமாகும். இது இன்றைய உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ நகருக்கு அருகிலுள்ள கக்கோரி என்னுமிடத்தில் 1925ம் ஆண்டு ஆகத்து திங்கள் 9ம் நாள் நிகழ்த்தப்பட்டது. இத்திட்டத்தை ராம் பிரசாத் பிசுமில் மற்றும் ஆஷ்ஃபக்குல்லா கான் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

நோக்கம்[தொகு]

இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பானது ஆங்கில அரசாங்கத்தை அகிம்சை வழி அல்லாத புரட்சிகர பாதையில் எதிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட அமைப்பாகும். இவர்களின் ஆயுத தேவையை பூர்த்தி செய்ய போதுமான பணம் இல்லாத படியால் ஆங்கில அரசாங்கம் இந்திய நாட்டின் வடக்கு மண்டல இருப்புப்பாதை வழி கொண்டு சென்ற அரசாங்கப் பணத்தை கொள்ளையடிப்பதாக முடிவு செய்யப்பட்டது. ஆங்கில அரசாங்கத்தின் செல்வமெல்லாம் இந்தியர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதாகும், எனவே அவர்களிடமிருந்து திருப்பி எடுப்பது குற்றமாகாது என இந்த கொள்ளைச்சம்பவத்தின் நியாயமாக வாதிடப்பட்டது. இந்த சம்பவம் ஆங்கில அதிகாரிகளை எதிர்த்து மட்டுமே நிகழ்த்தப்பட்ட போதிலும், தவறுதலாக இரயிலில் பயணம் செய்த சாதாரண பயணி ஒருவரும் கொல்லப்பட்டார்.

நிகழ்வுகள்[தொகு]

1925ம் ஆண்டு ஆகத்து 9 அன்று அன்றைய வடக்கு மாகாணத்தின் சகரன்புரிலிருந்து லக்னோ நோக்கி சென்றுகொண்டிருந்த ஆங்கில அரசாங்க இரயில், கக்கோரி நெருங்கிய பொழுது திடீரென சங்கிலி இழுத்து நிறுத்தப்பட்டது.கண்ணிமைக்கும் நேரத்தில் காவலாளிகள் இருந்த அறைக்குள்ளே போராளிகள் நுழைந்தனர்.அவர்களின் அதிரடி தாக்குதலை காவலர்களால் சமாளிக்க இயலவில்லை. சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள கிழக்கிந்திய பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இன்குலாப் சிந்தாபாத் என்று முழக்கமிட்டவாரே போராளிகள் பாய்ந்தோடினர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு

உசாத் துணை[தொகு]

  • கக்கோரி இரயில் கொள்ளை - தகவல் [1]
  • கக்கோரி இரயில் கொள்ளை - இந்தியா டுடே [2]

வெளி இணைப்புகள்[தொகு]