உசைனிவாலா தேசிய தியாகிகள் நினைவிடம்
हुसैनीवाला राष्ट्रीय शहीदी स्मारक, पंजाब, भारत | |
![]() உசைனிவாலா தேசிய தியாகிகள் நினைவிடம் | |
ஆள்கூறுகள் | 30°59′51″N 74°32′49″E / 30.99750°N 74.54694°E |
---|---|
இடம் | உசைனிவாலா, பெரோசுபூர் மாவட்டம், பஞ்சாப் (இந்தியா) |
வடிவமைப்பாளர் | இந்திய பஞ்சாப் அரசு |
வகை | நினைவுச் சுவரும் சிலையும் |
கட்டுமானப் பொருள் | செங்கல், பளிங்கு, உலோகம் |
திறக்கப்பட்ட நாள் | 1968 |
அர்ப்பணிப்பு | பகத் சிங், சிவராம் ராசகுரு மற்றும் சுக்தேவ் தபார் |
இணையதளம் | www |
உசைனிவாலா தேசிய தியாகிகள் நினைவிடம் (Hussainiwala National Martyrs Memorial) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெரோசுபூர் மாவட்டத்திலுள்ள உசைனிவாலா கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான பகத்சிங், சுக்தேவ் தாப்பர் மற்றும் சிவரம் ராச்குரு ஆகியோரின் நினைவாக இந்நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. வாகா-அத்தாரி எல்லை விழாவைப் போலவே தினசரி இங்கும் கொடியேற்றமும் இறக்கமும் இந்திய மற்றும் பாக்கித்தான் ஆயுதப்படை வீர்ர்களால் கூட்டாக இங்கு நடத்தப்படுகிறது.
தியாகிகள் நினைவிடம்
[தொகு]1931 மார்ச் மாதம் 23 அன்று பகத்சிங், சுகதேவ் மற்றும் ராச்குரு ஆகியோர் தகனம் செய்யப்பட்ட சட்லெச்சு ஆற்றின் கரையில் இந்த நினைவுச்சின்னம் அமைந்திருக்கிறது. பகத்சிங்குடன் இணைந்து மத்திய சட்டமன்றத்தில் குண்டுவீச்சில் ஈடுபட்டு 1965 ஆம் ஆண்டு இறந்த படுகேசுவர் தத்தும் இங்குதான் தகனம் செய்யப்பட்டார்.
உசைனிவாலா தேசிய தியாகிகள் நினைவுச்சின்னம் 1968 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[1] இந்தியா, பாக்கித்தான் எல்லையிலிருந்து 1 கிலோமீட்டர் (0.62 மைல்) தொலைவில் இந்தியப் பகுதியில் இவ்விடம் உள்ளது. இந்தியப் பாக்கித்தான் பிரிவினைக்குப் பிறகு தகனம் செய்யும் இடம் பாக்கித்தானின் ஒரு பகுதியாக மாறியது, ஆனால் 1961 ஆம் ஆண்டு சனவரி மாதம் 17 அன்று சுலேமன்கி நீர்த்திருப்பு முனைக்கு (பாசில்கா) அருகிலுள்ள 12 கிராமங்களுக்கு ஈடாக இந்தியாவுக்குத் திரும்பக் கொடுக்கப்பட்டது.[2]
இந்திய பொதுவுடமைக் கட்சியின் மாணவர் பிரிவு கொடுத்த அழுத்தம் காரணமாகவே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பும் அனைத்திந்திய இளையோர் கூட்டமைப்பும் பேரணியாகச் சேர்ந்து உசைன்வாலாவை திரும்பப் பெறக் கோரி போராட்டங்கள் நிகழ்த்தினர்.
ஆண்டு விழா
[தொகு]ஒவ்வோர் ஆண்டும், மார்ச் மாதம் 23 அன்று இந்நினைவிடத்தில் சாகீதி மேளா என்ற நிகழ்வு நடைபெறுகிறது. பஞ்சாப் மாநிலம் முழுவதும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.[3]

கொடியேற்றமும் இறக்கமும்
[தொகு]உசைனிவாலா-காந்தா சிங் வாலா எல்லையில் தினசரி காலையில் கொடியேற்றமும் மாலையில் கொடியிறக்கமும் விழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archived copy". Archived from the original on 1 அக்டோபர் 2015. Retrieved 21 அக்டோபர் 2011.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) Making of a memorial by K. S. Bains - ↑ "Why Indian Sikhs need binoculars for darshan across the border".
- ↑ "Dress and Ornaments". Archived from the original on 1 அக்டோபர் 2015. Retrieved 29 ஏப்ரல் 2016.