மைசூர் மாநிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மைசூர் மாநிலம்
இந்திய மாநிலம்

1947–1973

Coat of arms of Mysore State then now Karnataka state

சின்னம்

Location of Mysore State then now Karnataka state
1951 இல் மைசூர் மாநிலம்
வரலாறு
 •  மைசூர் இராச்சியம் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. 9 ஆகத்து 1947
 •  கருநாடகம் என பெயர் மாற்றப்பட்டது 1 நவம்பர் 1973
தற்காலத்தில் அங்கம்  இந்தியா

மைசூர் மாநிலம் (Mysore State) என்பது இந்திய ஒன்றியத்தின் ஒரு முன்னாள் மாநிலம் ஆகும். இந்தியக் குடியரசு 1947 இல் உருவான பிறகு மைசூர் இராச்சியத்தின் பிரதேசங்களுக்கு வெளியே உள்ள சில பகுதிகளுடன் சேர்ந்து, 1956 வரை [1] பெங்களூரைத் தலைநகராகக் கொண்டு இந்த மாநிலம் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருந்தது. மொழிவாரியாக கன்னடம் பேசும் ஒரே இன மக்களைக் கொண்ட மாநிலமாக 1956 இல் விரிவடைந்தது. [2] இது பின்னர் கர்நாடக மாநிலம் என பெயர் மாற்றப்பட்டது.

வரலாறு[தொகு]

மைசூர் ராஜ்ஜியம் என்பது பிரித்தானிய இந்திய ஆட்சிக் காலத்தில் இந்திய துணைக் கண்டத்தில் இருந்த மூன்று பெரிய சுதேச அரசுகளில் ஒன்றாகும். 1947 இல் பிரிட்டனிடமிருந்து இந்தியப் பேரரசு சுதந்திரம் பெற்ற பிறகு, மைசூர் மகாராஜா ஜெயச்சாமராஜா உடையார் இந்திய ஒன்றியத்துடன் தனது இராஜ்யத்தை இணைக்கும் ஒப்பந்த்ததில் கையெழுத்திட்டார். மைசூர் இராச்சியத்தின் பிரதேசங்கள் பின்னர் இந்திய ஒன்றியத்துக்குள் ஒரு மாநிலமாக மறுசீரமைக்கப்பட்டது. [3]

1956 மறுசீரமைப்புக்கு முன் தென்னிந்திய வரைபடத்தில் மைசூர் மாநிலம் நீல வடிவத்தில்

1956 ஆம் ஆண்டில், இந்திய அரசு மாநில எல்லைகளை மொழி அடிப்படையில் மறு-சீரமைப்பு செய்தது. 1 நவம்பர் 1956 அன்று மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் விளைவாக, கன்னடம் பேசும் பெல்காம் ( கோலாப்பூர் வட்டம் தவிர), பிஜப்பூர், தார்வார், வட கன்னட ஆகிய மாவட்டங்கள் பம்பாய் மாநிலத்திலிருந்து பிரித்து மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. [4] ஆந்திர மாநிலத்தில் இருந்து பெல்லாரி மாவட்டம் மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. தென் கனரா மாவட்டம் சென்னை மாநிலத்தில் இருந்தும், கொப்பள், ராய்ச்சூர், குல்பர்கா, பீதார் மாவட்டங்கள் ஐதராபாத் மாநிலத்தில் இருந்தும் பிரித்து மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. மேலும், மைசூர் மாநிலத்துடன் சிறிய கூர்க் மாநிலமும் இணைக்கப்பட்டு, மைசூர் மாநிலத்தின் ஒரு மாவட்டமாக ஆக்கப்பட்டது. [5] [6] இந்த மாநிலம் 1973 நவம்பர் முதல் நாள் அன்று கருநாடகம் என்று பெயர் மாற்றபட்டது. [7]

ஆளுநர்கள்[தொகு]

ஆட்சியாளர்
மைசூர் இராச்சியத்தின் மகாராஜாக்கள்
மைசூர் மகாராஜா
பழைய மைசூர் மாநிலத்தின் ராஜ்பிரமுகர்கள்
15 ஆகத்து 1947 1 நவம்பர் 1956 மகாராஜா ஜெயச்சாமராஜா உடையார் (பி. 1919 - இ. 1974)
ஒருங்கிணைந்த மைசூர் மாநிலத்தின் ஆளுநர்கள்
1 நவம்பர் 1956 4 மே 1964 மகாராஜா ஜெயச்சாமராஜா உடையார்
4 மே 1964 2 ஏப்ரல் 1965 சத்யவந்த் மல்லண்ணா ஸ்ரீநாகேஷ் (பி. 1903 - இ. 1977)
2 ஏப்ரல் 1965 13 மே 1967 வி. வி. கிரி (பி. 1894 - இ. 1980)
13 மே 1967 30 ஆகத்து 1969 கோபால் சுவரூப் பதக் (பி. 1896 - இ. 1982)
30 ஆகத்து 1969 22 அக்டோபர் 1969 ஏ. ஆர். சோம்நாத் ஐயர்
23 அக்டோபர் 1969 1 பிப்ரவரி 1972 தர்ம விரா (பி. 1906 - இ. 2000)
1 பிப்ரவரி 1972 10 சனவரி 1976 மோகன் லால் சுகாதியா (பி. 1916 - இ. 1982)
கர்நாடக மாநில ஆளுநர்கள்
கர்நாடக ஆளுநர்கள்
ஒருங்கிணைந்த மைசூர் மாநிலம் 1956

முதலமைச்சர்கள்[தொகு]

நிர்வாகிகள் அரசியல் கட்சி
மைசூர் இராச்சியத்தின் திவான்கள்
மைசூர் திவான்
பழைய மைசூர் மாநில முதல்வர்கள்
1946 25 அக்டோபர் 1947 திவான் ஆற்காடு ராமசாமி முதலியார் (பி. 1887 - இ. 1976) என்.ஏ
25 அக்டோபர் 1947 30 மார்ச் 1952 கிசாசம்பள்ளி செங்கலராய ரெட்டி (பி. 1902 - இ. 1976) இதேகா
30 மார்ச் 1952 19 ஆகத்து 1956 கெங்கல் ஹனுமந்தய்யா (பி. 1908 - இ. 1980)
19 ஆகஸ்ட் 1956 1 நவம்பர் 1956 கதிடல் மஞ்சப்பா (பி. 1910 - இ. 1992)
ஒருங்கிணைந்த மைசூர் மாநில முதல்வர்கள்
1 நவம்பர் 1956 16 மே 1958 எஸ். நிஜலிங்கப்பா (பி. 1902 - இ. 2000) இதேகா
16 மே 1958 9 மார்ச் 1962 பசப்பா தனப்பா ஜாட்டி (பி. 1912 - டி. 2002)
9 மார்ச் 1962 14 மார்ச் 1964 குடியரசு தலைவர் ஆட்சி
14 மார்ச் 1962 21 ஜூன் 1962 எஸ். ஆர். காந்தி இதேகா
21 ஜூன் 1962 3 மார்ச் 1967 எஸ். நிஜலிங்கப்பா
3 மார்ச் 1967 29 மே 1968 குடியரசு தலைவர் ஆட்சி
29 மே 1968 27 மார்ச் 1971 வீரேந்திர பட்டீல் இதேகா
27 மார்ச் 1971 20 மார்ச் 1972 குடியரசு தலைவர் ஆட்சி
20 மார்ச் 1972 1 நவம்பர் 1973 தேவராஜ் அர்ஸ் (பி. 1915 - இ. 1982) இதேகா
கர்நாடக மாநில முதல்வர்கள்
கர்நாடக முதல்வர்

இதையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

 ஆள்கூறுகள்: 12°18′N 76°39′E / 12.30°N 76.65°E / 12.30; 76.65

  1. "States of India since 1947". World Statesman. மூல முகவரியிலிருந்து 1 July 2014 அன்று பரணிடப்பட்டது.
  2. "Rajyotsava: The hows and whys of Karnataka".
  3. Sadasivan, S. N. (2005). Political and administrative integration of princely states By S. N. Sadasivan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170999683. https://books.google.com/books?id=kWptYbzpXE8C&pg=PA26. 
  4. "States Reorganization Act 1956". Commonwealth Legal Information Institute. மூல முகவரியிலிருந்து 25 July 2011 அன்று பரணிடப்பட்டது.
  5. "Google Books".
  6. Ramaswamy, Harish (1 June 2007). "Karnataka Government and Politics". Concept Publishing Company.
  7. Ninan, Prem Paul (2005-11-01). "History in the making". மூல முகவரியிலிருந்து 2015-12-22 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்_மாநிலம்&oldid=3277715" இருந்து மீள்விக்கப்பட்டது