பதான்கோட் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


பதான்கோட் மாவட்டம்
ਪਠਾਣਕੋਟ ਜ਼ਿਲ੍ਹਾ
पठानकोट जिला
District of Punjab
Located in the northwest part of the state
Location in Punjab, India
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பதான்கோட்
Named forபதானிய இராஜபுத்திரர்
தலைமையிடம்பதான்கோட்
பரப்பளவு[1]
 • மொத்தம்929
மக்கள்தொகை (2011)[2]
 • மொத்தம்6,26,154
 • அடர்த்தி670
Languages
 • Regionalபஞ்சாபி மொழி, இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுPB-35 / PB-68
பெரிய நகரம்பதான்கோட்
இணையதளம்http://pathankot.gov.in/

பதான்கோட் மாவட்டம் (Pathankot district) வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் இருபத்து இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பதான்கோட் ஆகும். இம்மாவட்டம் 27 சூலை 2011-இல் புதிதாக துவக்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

சிவாலிக் மலை அடிவாரத்தில் பஞ்சாப் மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பதான்கோட் மாவட்டம், இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.

வடக்கில் சம்மு காஷ்மீர் மாவட்டத்தின் கதுவா மாவட்டம், கிழக்கில் இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டம் மற்றும் காங்கிரா மாவட்டம், தெற்கில் ஹோசியார்பூர் மாவட்டம் எல்லைகளாக கொண்டது. பியாஸ் ஆறு மற்றும் ராவி ஆறு இம்மாவட்டத்தில் பாய்கிறது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

குர்தாஸ்பூர் மாவட்டத்தின் ஒரு வருவாய் வட்டமாக இருந்த பதான்கோட் 27 நவம்பர் 2011 முதல் பஞ்சாப் மாநிலத்தின் இருபத்து இரண்டாவது மாவட்டமாக செயப்படத்துவங்கியது. [3][4] 929 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பதான்கோட் மாவட்டம் பதான்கோட் மற்றும் தார் கலான் என இரண்டு வருவாய் வட்டங்களையும், நரோட் ஜெய்மால் சிங் மற்றும் பாமியால் என இரண்டு துணை வட்டங்களையும் கொண்டது.

நரோட் ஜெய்மால் சிங், பாமியா, தார்கலான், பதான்கோட், கரோட்டா மற்றும் சுஜன்பூர் என ஆறு ஊராட்சி ஒன்றியங்களையும், கிராமங்களையும் கொண்டது.

பொருளாதாரம்[தொகு]

இம்மாவட்டத்தின் இராவி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இரஞ்சித் சாகர் நீர்த்தேக்கம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் பல்நோக்கு நீர்த்தேக்கம் ஆகும். இந்நீர்த்தேக்கம் கோதுமை, அரிசி மற்றும் கரும்பு வேளாண்மை தொழிலுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பதான்கோட் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 626154 ஆக உள்ளது.

விமானப்படை தளம் தாக்குதல்[தொகு]

பதான்கோட்டில் உள்ள இந்திய இராணுவத்தின் விமானப்படை தளத்தை சனவரி 2016-இல் பாகிஸ்தான் நாட்டின் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பு தீவிரவாதிகள் தகர்க்கும் முயற்சியை இந்திய இராணுவ வீரர்கள் தடுத்து விட்டனர்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "District profile".
  2. "Administrative divisions".
  3. Naveen S. Garewal (27 July 2011). "Eye on urban voter, Fazilka, Pathankot made districts". The Tribune, Chandigarh. http://www.tribuneindia.com/2011/20110728/main4.htm. பார்த்த நாள்: 23 January 2012. 
  4. News services (28 July 2011). "The state gets Fazilka and Pathankot districts". Indian Express. http://www.indianexpress.com/news/state-gets-fazilka-pathankot-districts/823445/. பார்த்த நாள்: 23 January 2012. 
  5. [http://4tamilmedia.com/newses/world/34773-2016-01-25-03-01-23 பதான்கோட் தாக்குதலோடு தொடர்புபட்ட பாக்’ குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி: நவாஸ் ஷெரீப்
  6. பதான்கோட் தாக்குதல் சம்பவம்: ஜெ-இ-முகம்மது தலைவர்


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதான்கோட்_மாவட்டம்&oldid=2794389" இருந்து மீள்விக்கப்பட்டது