சிந்து-கங்கைச் சமவெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிந்து-கங்கைச் சமவெளியைக் காட்டும் நிலப்படம்
வட இந்தியாவின் கங்கைச் சமவெளிப் பகுதிகள்

சிந்து-கங்கைச் சமவெளி, மிகவும் வளம் பொருந்திய, பரந்த சமவெளியாகும். இது, வட இந்தியாவின் பெரும்பகுதி, மக்கள் தொகை மிகுந்த பாகிஸ்தானின் பகுதிகள், வங்காளதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இப்பகுதிகளிலிருந்து வடிந்தோடும் நீரை எடுத்துச் செல்கின்ற ஆறுகளான சிந்து நதி, கங்கை நதி ஆகியவற்றின் பெயரைத் தழுவியே இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.[1] இச் சமவெளி இந்துக்கள், முஸ்லிம்கள், பௌத்தர்கள் போன்ற பல்வேறு சமயத்தவர்களின் சொந்த இடமாக உள்ளது.

சிந்து-கங்கைச் சமவெளியின் வடக்கில் இமயமலை உள்ளது. இது இப்பகுதியில் ஓடும் பல ஆறுகளுக்கு நீர் வழங்குவதுடன், ஆற்றுத் தொகுதிகளூடாக இப் பகுதியில் படிந்துள்ள வளமான வண்டல் படிவுகளின் மூலமாகவும் விளங்குகிறது. இச் சமவெளியின் தெற்கு எல்லையில் விந்தியம், சத்புரா ஆகிய மலைத் தொடர்களும், சோட்டா நாக்பூர் மேட்டு நிலமும் அமைந்துள்ளன.

இப் பகுதி உலகின் மக்கள்தொகை கூடிய பகுதிகளுள் ஒன்றாகும். இங்கே உலக மக்கள்தொகையில் 1/7 பங்குக்குச் சமமான 900 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்.

நாடுகளும் மாநிலங்களும்[தொகு]

இச்சமவெளியில் பாகிஸ்தானின் சிந்து மாகாணம் மற்றும் பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், அரியானா, உத்தரப் பிரதேசம், பிகார் மற்றும் மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Indo-Gangetic Plain