பீம்சென் தபா
தலைமைப் படைத்தலைவர் & பிரதம அமைச்சர் பீம்சென் தபா श्री मुख्तियार जर्नेल साहेब भीमसेन थापा | |
---|---|
![]() | |
பீம்சென் தபா, நேபாள முதலமைச்சர் (1806 - 1837) | |
நேபாள பிரதம அமைச்சர் | |
பதவியில் 1806–1837 | |
அரசர் | கீர்வான் யுத்த விக்ரம் ஷா ராஜேந்திர விக்ரம் ஷா |
முன்னவர் | ராணா பகதூர் ஷா முதலமைச்சராக |
பின்வந்தவர் | ராணா ஜங் பாண்டே |
தலைமைப் படைத்தலைவர் | |
முன்னவர் | தாமோதர் பாண்டே |
பின்வந்தவர் | ராணா ஜங் பாண்டே |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஆகத்து , 1775 கோர்க்கா, நேபாளம் |
இறப்பு | 5 ஆகத்து 1839 காட்மாண்டு, நேபாளம் | (அகவை 64)
தேசியம் | நேபாளி |
பிள்ளைகள் | லலிதா தேவி பாண்டே ஜனக குமாரி பாண்டே தீர்க்க குமாரி பாண்டே [1] |
இருப்பிடம் | தாபாதலி அரண்மனை (1798-1804), பாக் அரண்மனை (1804-)[2] |
சமயம் | இந்து சமயம் |
படைத்துறைப் பணி | |
பற்றிணைவு | நேபாள இராச்சியம் |
கிளை | நேபாள இராணுவம் |
தர வரிசை | தலைமைப் படைத்தலைவர் |
படைத்துறைப் பணி | தலைமைப் படைத்தலைவர் |
சமர்கள்/போர்கள் | ஆங்கிலேய-நேபாளப் போர் |
பீம்சென் தபா (Bhimsen Thapa) listen (உதவி·தகவல்) (நேபாளி: भीमसेन थापा; 1775 – 1839) நேபாள இராச்சியத்தின் முதல் தலைமைப் படைத்தலைவராகவும், முக்தியார் எனும் பிரதம அமைச்சராகவும் 1806 முதல் 1837 முடிய பணியாற்றியவர். மாதவர் சிங் தபா, இவரது அண்னன் மகன் ஆவார்.
நேபாள இராச்சியத்தின் மூன்றாவது மன்னர் ராணா பகதூர் ஷாவின் மெய்காப்பாளராகவும், தனிச் செயலராகவும் அரண்மனைப் பணியைத் துவக்கினார் தபா வம்சத்தின் பீம்சென் தபா.
நேபாள மன்னர் ராணா பகதூர் ஷாவின் துயரமான காலங்களில் பீம்சென் தபா உடனிருந்ததால், மன்னர் ராணா பகதூர் ஷா, 1804ல் பீம்சென் தாபாவிற்கு கஜி எனப்படும் அமைச்சர் பதவி வழங்கினார்.
1806ல் மன்னர் ராணா பகதூர் ஷா, தனது ஒன்றுவிட்ட தம்பியால் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க 93 அரசத் துரோகிகளை படுகொலை செய்தார். இதனால் பீம்சென் தபாவிற்கு நேபாள இராச்சியத்தின் பிரதம அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
பீம்சென் பிரதம அமைச்சராக இருந்த காலத்தில், நேபாள இராச்சியம், கிழக்கில் சத்லஜ் ஆறு முதல் மேற்கில் டீஸ்டா ஆறு வரை பரவி இருந்தது.
1814 - 1816 நடைபெற்ற ஆங்கிலேய-நேபாளப் போரின் முடிவில் ஏற்பட்ட சுகௌலி உடன்படிக்கையின் படி, நேபாளியர்கள் கைப்பற்றியிருந்த குமாவுன், கார்வால், சிக்கிம், டார்ஜிலிங், மொரங் பகுதிகளை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு விட்டுத் தரப்பட்டது.
மேலும், கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்களின் அனுப்பிய ஒரு அரசப் பிரதிநிதியை நேபாள அரசவையில் நிரந்தரமாக அனுமதிக்க வேண்டியதாயிற்று.
பருவ வயது அடைவதற்கு முன்னரே மன்னர் கீர்வான் யுத்த விக்ரம் ஷா 1816ல் இறக்கும் போதும், நேபாள நாட்டின் அடுத்த வாரிசு ராஜேந்திர விக்ரம் ஷா குழந்தையாக இருந்த போதும், பீம்சென் தாபா உதவியுடன் ராணி திரிபுரசுந்தரி, நாட்டின் காப்பாளராக செயல்பட்டார்.
பீம்சென் தபாவின் ஆதரவாளரான ராணி திரிபுரசுந்தரி 1832ல் காலமானதாலும், மன்னர் ராஜேந்திர விக்ரம் ஷா ஆட்சி அதிகாரத்தில் பலமற்றவராக இருந்ததாலும், நேபாள அரசவை பிரபுக்களில், குறிப்பாக பாண்டேக்கள், தாமோதர் பாண்டேவின் கொலைக்கு காரணமானவர் என பீம்சென் தாபா மீது குற்றம் சாட்டப்பட்டது.
இறுதியில் பீம்சென் தபாவை சிறையில் அடைத்தனர். 1839ல் பீம்சென் தபா, 1839ல் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். இப்பிணக்குகளால் நேபாள இராச்சியத்தின் மன்னர்களை பொம்மை அரசர்களாகக் கொண்டு ராணா வம்சத்தவர்கள் 1846 முதல் மறைமுகமாக நேபாள இராச்சியத்தை நிர்வகிக்கத் தொடங்கினர்.
குடும்பம்[தொகு]
பீம்சென் தாபாவின் தந்தையின் பெயர் அமர் சிங் தபா, தாயின் பெயர் சத்தியரூப மாயா. இவரது பாட்டன் பெயர் வீரபத்திர தபா. இவரது நான்கு சகோதரர்கள்:நயின் சிங், பக்தவர் சிங், அம்ரித் சிங் மற்றும் ரணவீர சிங். இவரது மாற்றாந்தாயின் குழந்தைகள் ரணபம் மற்றும் ரண்சவர் ஆகும். பீம்சென் தாபாவின் ஒரு ஆண் மகன் சிறு வயதில் இறந்துவிட்டார். இவரது மூன்று மகள்கள லலிதா தேவி, ஜனக குமாரி மற்றும் தீர்க்க குமாரி ஆவர்.
இதனையும் காண்க[தொகு]
- நேபாள பிரதம அமைச்சர்கள்
- தாபா வம்சம்
- ஷா வம்சம்
- பிரிதிவி நாராயணன் ஷா
- ராணா பகதூர் ஷா
- நேபாள இராச்சியம்
- ராணா பகதூர் ஷா
- ராணி ராஜராஜேஸ்வரி
- ராணி திரிபுரசுந்தரி
- ஆங்கிலேய-நேபாளப் போர்
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ Paudel, Punya Prasad (2006). Aatreya dekhi Paudel samma. Paudel Society for Cultural Promotion. பக். 101.
- ↑ Pradhan 2012, ப. 23-24.
ஆதாரங்கள்[தொகு]
- Acharya, Baburam (Nov 1, 1974) [1957], "The Downfall of Bhimsen Thapa", Regmi Research Series, Kathmandu, 6 (11): 214–219, Dec 31, 2012 அன்று பார்க்கப்பட்டது
- Acharya, Baburam (2012), Acharya, Shri Krishna (ed.), Janaral Bhimsen Thapa : Yinko Utthan Tatha Pattan (Nepali), Kathmandu: Education Book House, p. 228, ISBN 9789937241748CS1 maint: Unrecognized language (link)
- Acharya, Baburam (1967), Sri Panca Badamaharajadhiraja Prthvinarayana Saha: Samdipta Jivani, I. Sam.1723-75 (Nepali), 2–3, Kathmandu: Sri Panca Maharajadhiraja Press SachivalayaCS1 maint: Unrecognized language (link)
- Amatya, Shaphalya (1978), "The failure of Captain Knox's mission in Nepal" (PDF), Ancient Nepal, Kathmandu (46–48): 9–17, Jan 11, 2013 அன்று பார்க்கப்பட்டது
- Hunter, William Wilson (1896), Life of Brian Houghton Hodgson, London: John Murry
- Joshi, Bhuwan Lal; Rose, Leo E. (1966), Democratic Innovations in Nepal: A Case Study of Political Acculturation, University of California Press, p. 551
- Kandel, Devi Prasad (2011), Pre-Rana Administrative System, Chitwan: Siddhababa Offset Press, p. 95
- Karmacharya, Ganga (2005), Queens in Nepalese politics: an account of roles of Nepalese queens in state affairs, 1775–1846, Kathmandu: Educational Pub. House, p. 185, ISBN 9789994633937
- Nepal, Gyanmani (2007), Nepal ko Mahabharat (Nepali) (3rd ed.), Kathmandu: Sajha, p. 314, ISBN 9789993325857CS1 maint: Unrecognized language (link)
- Oldfield, Henry Ambrose (1880), Sketches from Nipal, Vol 1, 1, London: W.H. Allan & Co.
- Pemble, John (2009), "Forgetting and remembering Britain's Gurkha War", Asian Affairs, 40 (3): 361–376, doi:10.1080/03068370903195154
- Pradhan, Kumar L. (2012), Thapa Politics in Nepal: With Special Reference to Bhim Sen Thapa, 1806–1839, New Delhi: Concept Publishing Company, p. 278, ISBN 9788180698132
- Prinsep, Henry Thoby (1825), History of the political and military transactions in India during the administration of the Marquess of Hastings, 1813–1823, Vol 1, 1, London: Kingsbury, Parbury & Allen
- Rana, Rukmani (Apr–May 1988), "B.H. Hogson as a factor for the fall of Bhimsen Thapa" (PDF), Ancient Nepal, Kathmandu (105): 13–20, Jan 11, 2013 அன்று பார்க்கப்பட்டது
- Regmi, Mahesh Chandra (1976), Landownership in Nepal, University of California Press, p. 252, ISBN 9780520027503
- Regmi, Mahesh Chandra (June 1987a), "Rana Bahadur Shah's Expense in Banaras", Regmi Research Series, 19 (6): 84–89, Dec 31, 2014 அன்று பார்க்கப்பட்டது[தொடர்பிழந்த இணைப்பு]
- Regmi, Mahesh Chandra (July–Aug 1987b), "Rana Bahadur Shah's Expense in Banaras", Regmi Research Series, 19 (7–8): 92–98, Dec 31, 2014 அன்று பார்க்கப்பட்டது Check date values in:
|date=
(உதவி)[தொடர்பிழந்த இணைப்பு] - Regmi, Mahesh Chandra (March 1988), "Rana Bahadur Shah's Expense in Banaras", Regmi Research Series, 20 (3): 31–37, Dec 31, 2014 அன்று பார்க்கப்பட்டது[தொடர்பிழந்த இணைப்பு]
- Savada, Andrea Matles, ed. (1993), Nepal and Bhutan : country studies (3rd ed.), Washington, D.C.: Federal Research Division, Library of Congress, ISBN 0844407771
- Stiller, Ludwig F. (1973), The rise of the House of Gorkha: a study in the unification of Nepal, 1768–1816, Manjusri Publication House, p. 390
- Uprety, Prem (June 1996), "Treaties between Nepal and her neighbors: A historical perspective", Tribhuvan University Journal, Kathmandu, 19 (1): 15–24, 2013-10-19 அன்று மூலம் பரணிடப்பட்டது, Oct 19, 2013 அன்று பார்க்கப்பட்டது
- Waller, Derek J. (2004) [1990], The Pundits: British Exploration of Tibet and Central Asia, University Press of Kentucky, p. 327, ISBN 9780813191003
- Whelpton, John (2004), "The Political Role of Brian Hodgson", in Waterhouse, David (ed.), Origins of Himalayan Studies: Brian Houghton Hodgson in Nepal and Darjeeling, Royal Asiatic Society Books (1 ed.), Taylor & Francis, p. 320, ISBN 9781134383634
- Whelpton, John (1991), Kings, soldiers, and priests: Nepalese politics and the rise of Jang Bahadur Rana, 1830-1857, Manohar Publications, p. 315
மேலும் படிக்க[தொகு]
- Acharya, Baburam (January 1, 1971) [1962], "The Fall of Bhimsen Thapa and the Rise of Jung Bahadur Rana", Regmi Research Series, Kathmandu, 3 (1): 13–25, Dec 31, 2012 அன்று பார்க்கப்பட்டது[தொடர்பிழந்த இணைப்பு]
- Acharya, Baburam (September 1, 1972) [1967], "General Bhimsen Thapa and Samar Jung Company", Regmi Research Series, Kathmandu, 4 (9): 161–167, 31 December 2012 அன்று பார்க்கப்பட்டது
- Acharya, Baburam (2008), Janaral Bhimsen Thapa : Yinlai Maile Jasto Dekhen (Nepali) (paperback ed.), Kathmandu: Ratna Pustak Bhandar, p. 87CS1 maint: Unrecognized language (link)
- Acharya, Baburam (2013), The Bloodstained Throne: Struggles for Power in Nepal (1775-1914), UK: Penguin, p. 224, ISBN 9789351182047
- Adhikari, Indra (2015), Military and Democracy in Nepal, Routledge, p. 382, ISBN 9781317589068
- Amatya, Shaphalya (April 1969), "Indo-Nepalese Relations in the Beginning of the 19th Century (1799–1801)" (PDF), Ancient Nepal, Kathmandu (7): 46–49, Jan 11, 2013 அன்று பார்க்கப்பட்டது
- Amatya, Shaphalya (October 1969), "British diplomacy and its various mission in Nepal from 1767 to 1799" (PDF), Ancient Nepal, Kathmandu (6): 1–5, Jan 11, 2013 அன்று பார்க்கப்பட்டது
- Karmacharya, Ganga (July 2000), "Lalit Tripurasundari ko nidhan ra Bhimsen Thapa ko avasan" (PDF), Contributions to Nepalese Studies (Nepali), 27 (2): 269–282, Dec 28, 2014 அன்று பார்க்கப்பட்டதுCS1 maint: Unrecognized language (link)
- Michael, Bernardo A. (2014), Statemaking and Territory in South Asia: Lessons from the Anglo–Gorkha War (1814–1816), Anthem Press, p. 250, ISBN 9781783083220
- Nepali, Chittaranjan (2002) [1956], Janaral Bhimsen Thapa Ra Tatkalin Nepal (Nepali) (1st ed.), Kathmandu: Ratna Pustak Bhandar, p. 248, ISBN 9993304204CS1 maint: Unrecognized language (link)
- Nepali, Chittaranjan (1999), Shree 5 Ranbahadur Shah (Nepali) (1st ed.), Kathmandu: Ratna Pustak Bhandar, p. 140, ISBN 9993301779CS1 maint: Unrecognized language (link)
- Pande, Bhim Bahadur (1983), Rashtra Bhakti ko Jhalak (Panday Bamshako Bhumika) (Nepali), Ratna Pustak Bhandar, p. 2561CS1 maint: Unrecognized language (link)
- Pemble, John (1971), The Invasion of Nepal: John Company at War, Oxford University Press, p. 402, ISBN 9780198215493
- Raj, Prakash A. (2003), Kot Parva ki Maharani Rajyalaxmi (Nepali) (2nd ed.), Kathmandu: Nabeen Publications, p. 48, ISBN 9993380903CS1 maint: Unrecognized language (link)
- Regmi, Mahesh Chandra (1999) [1972], A Study in Nepali Economic History 1768–1846, Bibliotheca Himalayica (1st ed.), Pinnacle Technology, ISBN 9781618204301
- Regmi, Mahesh Chandra (1995), Kings and political leaders of the Gorkhali Empire, 1768–1814, Orient Longman, p. 83, ISBN 9788125005117
- Regmi, Mahesh Chandra (1999), Imperial Gorkha: An Account of Gorkhali Rule in Kumaun (1791–1815), Pinnacle Technology, ISBN 9781618203588
- Singh, Nagendra Kr. (1997), Nepal: Refugee to Ruler : a Militant Race of Nepal, APH Publishing, p. 250, ISBN 9788170248477
- Stiller, Ludwig F. (1976), Silent Cry: People of Nepal, 1816–1839, Kathmandu: Sahayogi Prakashan, p. 344
- Whelpton, John (1991), Kings, soldiers, and priests: Nepalese politics and the rise of Jang Bahadur Rana, 1830–1857, Delhi: Manohar Publications, p. 315, ISBN 9788185425641