முகல்சராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முகல்சராய்
தீனதயாள் நகர்
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சந்தௌலி
ஏற்றம்65 m (213 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,54,692
மொழிகள்
 • அலுவலக மொழிஇந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சலக சுட்டு எண்232101
தொலைபேசிக் குறியீடு5412

முகல்சராய் (Mughalsarai)உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள சந்தௌலி மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சியாகும்[1]. இது வாரணாசியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இது இந்திய இரயில்வேயின் முக்கியமான தொடருந்து சந்திப்பாகும்.

இது இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த ஊர்.

இரயில்வே[தொகு]

இங்குள்ள பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையம் இந்தியாவின் மும்முரமாக இருக்கும் தொடருந்து சந்திப்பு ஆகும். இது ஆசியாவின் பெரிய சரக்கு இரயில் முற்றமாகும். முகல்சராய் கோட்டம், மத்திய கிழக்கு இரயில்வே பகுதியின் கீழே வருகிறது. தினமும் 125க்கும் அதிகமான தொடருந்து முகல்சராய் இரயில் நிலையத்தினை கடந்து செல்கிறது. இதுவழியே செல்லும் அனைத்து தொடருந்தும் இந்த நிலையத்தில் நின்று செல்லும். இது உத்தரப் பிரதேசத்தின் இரண்டாவது மும்முரமான தொடருந்து சந்திப்பு ஆகும். தினமும் 400000 அதிகமான பயணிகளை கையாளுகிறது.

வாரணாசி நகரம், முகல்சராய் தொடருந்து நிலையத்திலிருந்து ஜிடி சாலை வழியாக 19 கிலோமீட்டர்கள் (12 mi) தொலைவிலுள்ளது.

சாலை[தொகு]

முகல்சாராயின் வழியே தேசிய நெடுஞ்சாலை எண் 2 செல்கிறது. இது கிராண்ட் டிரங்க் சாலை என்றறியப்படுகிறது. இது பேரரசர் செர் ஷா சூரியினால் கட்டப்பட்டது. புராணக்காலத்தில் இந்த சாலை உத்தரபாத் என்றறியப்பட்டதாகவும், இதன் வழியே ஜராசந்த், கிருஷ்ணபகவானின் ஆட்சியின் கீழே இருந்த மதுரா நகரத்தை தாக்க சென்றதாகவும் கூறுவர்.

முகல்சராய், கல்கத்தாவிலிருந்து சாலை வழியே 667 கிலோமீட்டர்கள் (414 mi) தொலைவில் அமைந்திருக்கிறது.

சான்றுகள்[தொகு]

  1. "முகல்சராய்". ஆகத்து 10, 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகல்சராய்&oldid=2737620" இருந்து மீள்விக்கப்பட்டது