பழங்குடியினர் சங்க நண்பர்கள்
பழங்குடியினர் சங்க நண்பர்கள் | |
---|---|
இந்தியா | |
தகவல் | |
தொடக்கம் | 1989 |
பழங்குடியினரின் சங்க நண்பர்கள் (Friends of Tribals Society), அல்லது வன்பந்து பரிசத் என்பது இந்தியாவில் உள்ள ஆதிவாசி, கிராமப்புற பழங்குடியின மக்களிடையே கல்வியறிவு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 1989-இல் உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பாகும். இந்த சங்கம் கிராமங்களில் ஓர் ஆசிரியர் பள்ளிகளை இயக்குகிறது. உள்ளூர் சமூகத்தின் பயிற்சி பெற்ற உறுப்பினர்களால் இச்சங்கம் வழிநடத்தப்படுகிறது.[1]
பழங்குடியினரின் சங்க நண்பர்கள் வெளிநாட்டில் நிதி திரட்டுவதில் தீவிரமாகச் செயல்படும் ஏகலைவன் கல்வி அறக்கட்டளையுடன் தொடர்புடையது.[2] அசாம், ஒரிசா, பீகார், சார்க்கண்டு, மத்தியப் பிரதேசம், சத்தீசுகர், மகாராட்டிரா மற்றும் கருநாடகாவில் பயிற்சிகளை நடத்துகிறது. அதே நேரத்தில் இதன் சகோதர அமைப்பான பாரத் லோக் சிக்ஷா பரிசத் உத்தரப் பிரதேசம், உத்தராகண்டம், இமாச்சலப் பிரதேசம், அரியானா, பஞ்சாப் மற்றும் சம்மு காசுமீர் ஆகிய மாநிலங்களில் செயல்படுகிறது.[3]
பள்ளிகள் (ஏகல் வித்யாலயாசு) ஆசிரியராகப் பயிற்சி பெற்ற உள்ளூர் நபரால் வழிநடத்தப்படுகின்றன.மாநில மொழியில் அடிப்படை கல்வியறிவு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்து மதத்தின் கருத்துகளையும் இவர்கள் அறிமுகப்படுத்துகின்றனர். இது இந்து மதம் முக்கிய மதமாக இல்லாதப் பகுதிகளில் கூட.செயல்படுத்தப்படுகிறது.[4] இந்துக் கலாச்சாரத்தைப் போதிக்கக் கூடாது என்ற தீவிரவாதக் குழுக்களின் உத்தரவைப் புறக்கணித்ததற்காக ஏகல் வித்யாலயா ஆசிரியர் ஒருவர் நக்சலைட்களால் கொல்லப்பட்டார்.[5] சூலை 2003 நிலவரப்படி, 222,775 மாணவர்களுடன் 6,966 பள்ளிகளைப் பழங்குடியினரின் சங்கத்தின் நண்பர்கள் இயக்கி வருகின்றனர்.[4] சூலை 2007-இல், பழங்குடியினரின் சங்க நண்பர்கள் மற்றும் ஏகல் வித்யாலயா 23,000 பள்ளிகளுக்கு மேல் இயங்கி வந்தது.[6] 2011ஆம் ஆண்டுக்குள் 30,000 பள்ளிகளை இயக்கும் இலக்கை பழங்குடியினரின் சங்க நண்பர்கள் கொண்டிருந்தனர்.[7] மார்ச் 2010க்குள் 10,30,290 மாணவர்களைக் கொண்ட 34,000 பள்ளிகளை எட்டிய இலக்கை எட்டியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Friends of Tribals Society (FTS) an introduction". Friends of Tribals Society. Archived from the original on 2011-07-11. பார்க்கப்பட்ட நாள் 2010-12-20.
- ↑ "Newsletter October 2010". Ekal Vidyalaya Foundation. Archived from the original on 2011-07-26. பார்க்கப்பட்ட நாள் 2010-12-20.
- ↑ "EKAL VIDYALAYA MOVEMENT". Ekal Vidyalaya India. பார்க்கப்பட்ட நாள் 2011-09-10.
- ↑ 4.0 4.1 HARTOSH SINGH BAL (January 18, 2004). "Growing Tribe". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2010-12-20.
- ↑ Aarti Dhar (Mar 18, 2004). "Making inroads into the tribal belt". The Hindu. Archived from the original on February 8, 2008. பார்க்கப்பட்ட நாள் 2010-12-20.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Friends of Tribals Society to open chapter". The Hindu. Jul 15, 2007. Archived from the original on January 16, 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-12-20.
- ↑ SUDESHNA BANERJEE (January 5, 2007). "Books and beyond - Reaching out to the tribals". The Telegraph (Kolkata). Archived from the original on October 25, 2012. பார்க்கப்பட்ட நாள் 2010-12-20.