நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி
நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி | |||||||
---|---|---|---|---|---|---|---|
நக்சலைட்டு- மவோயிஸ்ட் போராளிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் (2013) (அடர் சிவப்பு நிறம் - கடுமையாக பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்கள்-(மெரூன் நிறம்- மிதமாக பாதிக்கப்ப்பட்ட 16 மாவட்டங்கள்)- (மஞ்சள் நிறம்-குறைந்த அளவு பாதிக்கப்பட்ட 92 மாவட்டங்கள்) |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இந்தியா[1]
வலதுசாரி ஆயுதக் குழுக்கள்: | நக்சலைட்டு-மாவோயிஸ்ட்கள்:
ஆதரவளிப்பவர்கள்: புதிய மக்கள் படை [2] |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பிரணாய் சகாய் (காவல் துறை தலைவர்)[3] கி. விஜயகுமார் (சிறப்பு அதிரடிப் படைத் தலைவர்); 1975–2012) மகேந்திர கர்மா † | முப்பல்ல இலட்சுமண ராவ் எனும் கணபதி ஆனந்த் கோஷா அங்கித் பாண்டே கிஷண்ஜி † சவ்வியசாசி பாண்டே (பிடிபட்டார்) பிரசாந்த் போஸ் (பிடிபடார்) யாலவர்த்தி நவீன் பாபு † நர்மதா அக்கா † சாம்சேர் சிங் சேரி † |
||||||
பலம் | |||||||
மத்திய சேமக் காவல் படை 80,000[4] | 10,000–20,000 போராளிகள் (2009–2010 மதிப்பீடு)[5][6] 10,000–40,000 உறுப்பினர்கள் & 50,000–100,000 போராளிகள் (2010 மதிப்பீடு)[7][8] 6,500–9,500 போராளிகள் (2013 மதிப்பீடு)[9] |
||||||
இழப்புகள் | |||||||
1999 முதல்: 2,672 கொல்லப்பட்டனர்[10] | 1999 முதல்: 3,253 கொல்லப்பட்டனர்[10] | ||||||
1999 முதல்: 7,839 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்[10] மொத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் 13,920 |
நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி, இந்தியாவின் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் மாநில மற்றும் நடுவண் அரசிற்கு எதிராக நக்சலைட்டு–மாவோயிஸ்ட் போராளிகளின் தொடரும் பிணக்குகளைக் குறிக்கிறது.[11]
நக்சல்பாரி இயக்கத்தின் தொடர்ச்சியாக, 2004ல் பிளவு பட்ட மாவோயிஸ்ட் போராளிக் குழுக்கள், மக்கள் யுத்தக் குழு மற்றும் மாவோயிஸ்ட் பொதுவுடமை மையம் என்ற பெயர்களில் ஒன்றிணைந்தனர்.
மாவோயிஸ்ட் கைதிகளை சிறையிலிருந்து விடுவிப்பதற்கும், வேளாண் நிலங்களை மறு விநியோகம் செய்வது தொடர்பாக, சனவரி, 2005ல் ஆந்திரப் பிரதேச அரசிற்கும் - மாவோயிஸ்ட் போராளிகளின் குழுவிற்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. [12] 2005 முதல் நக்சலைட்டு-மாவோயிஸ்ட் இயக்கம் இந்தியாவின் 29 மாநிலங்களில் பரவியது. போராளிகளை ஒடுக்க காவல்துறைக்கும், போராளிகளுக்கும் இடையே நடந்த மோதல்களில் ஆண்டுதோறும் இருதரப்பிலும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டது.[13][13][14]
நக்சலைட்டு-மாவோயிஸ்ட் இயக்கத்தின் 6,500 முதல் 9,500 முடிய இருந்த ஆயுதம் தாங்கிய போராளிகள், தங்களை மக்கள் விடுதலை கொரில்லாப் படை என அழைத்துக் கொண்டனர். [15]
நக்சலைட்டு-மாவோயிஸ்ட் போராளிகள் அதிகம் நடமாடும் பகுதிகள் சிவப்பு தாழ்வாரம் என அழைக்கப்பட்டது. பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின், குறிப்பாக பழங்குடி மக்கள் அதிகம் வாழும் காடும் மலையும் சார்ந்த பகுதிகளில் நக்சலைட்டு-மாவோயிஸ்ட் போராளிகள் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் பரவியிருந்தனர்[15]மேலும் ஏழ்மை நிலையில் இங்கு வாழும் பழங்குடி மக்களின், வாழ்வாதாரங்களை சுரண்டும் அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை எதிர்ப்பதாக கூறிக்கொள்கின்றனர்.[16]
ஒன்றிணைந்த ஆந்திரப்பிரதேசத்தின் 58% பொதுமக்களின் கருத்துக் கணிப்புப் படி, 18% பொதுமக்கள் மட்டுமே மாவோயிஸ்ட் ஆயுதந் தாங்கிய போராளிகளுக்கு எதிராக இருந்தனர். [17] விவசாய கூலித்தொழிலாளர்களின் நில உரிமைகளுக்காகவும், வேலை வாய்ப்புகளுக்காகவும் நக்சலைட்டுகள் அடிக்கடி, அரசு ஊழியர்கள் மீதும், காவல் துறையினர் மீதும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தினர். [18] அரசிற்கு எதிராக ஆயுதம் தாங்கிய கிராமப்புற மக்கள், தங்களின் எழுச்சிக்காக கடைபிடிக்கும் மூலோபாயத்தை பின்பற்றுகிறார்கள் என நக்சலைட்டுகள் கூறுகின்றனர். [19]
பிப்ரவரி 2009ல் இந்திய அரசு, சிவப்பு தாழ்வாரப் பகுதிகள் செயல்படும் நக்சலைட்டு-மாவோயிஸ்ட் போராளிகளை ஒடுக்க, தேசிய அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கைத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் மற்றும் விவசாயக் கூலிகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புத் திட்டங்களையும், நக்சலைட்டு-மாவோயிஸ்ட் போராளிகளின் ஆதிக்கத்தை குறைக்க, இப்பகுதியில் சிறப்பு காவல் படைகளுக்கு அதிக நிதியுதவி ஒதுக்கி வழங்கியது.[20][21]
ஒருங்கிணைந்த நடவடிக்கை திட்டத்தால், ஆகஸ்டு 2010க்குப் பிறகு கர்நாடகா மாநிலத்தை சிவப்பு தாழ்வாரப் பகுதிகளிலிருந்து நீக்கப்பட்டது [22] சூலை 2011இல் ஒன்பது இந்திய மாநிலங்களில் 83 மாவட்டங்கள் மட்டும் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட அறிவிக்கப்பட்டது [23][24][25]டிசம்பர் 2011இல், நக்சலைட்டு-மாவோயிஸ்ட் தாக்குதல்களால் இறந்தவர்கள் மற்றும் காயப்பட்டோர் எண்ணிக்கை ஏறக்குறைய 50% ஆக குறைந்தது அரசு அறிவித்துள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Maoist Communist Centre - Left Wing Extremism, India, South Asia Terrorism Portal. Satp.org. Retrieved on 2014-05-21.
- ↑ Asia Times Online :: Southeast Asia news and business from Indonesia, Philippines, Thailand, Malaysia and Vietnam பரணிடப்பட்டது 2012-04-14 at the வந்தவழி இயந்திரம். Atimes.com (2010-04-22). Retrieved on 2014-05-21.
- ↑ "Anti-Naxal operations will be intensified: CRPF chief Pranay Sahay". Indiatimes. January 11, 2013. http://articles.economictimes.indiatimes.com/2013-01-11/news/36280119_1_anti-naxal-operations-naxal-ambush-crpf-chief-pranay-sahay. பார்த்த நாள்: 31 March 2013.
- ↑ "Five CRPF officers dead in suicide attack as fidayeen extremists disguised as cricket players turn grenade launchers on Srinagar school". Daily Mail. 14 March 2013. http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2292905/Fidayeen-kill-CRPF-men-Militants-attack-jawans-Srinagar-school.html.
- ↑ Srivastava, Mehul (2010-07-29). "Maoists in India Blow Up Pipelines, Putting $78 Billion at Risk". Bloomberg இம் மூலத்தில் இருந்து 2010-08-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100802095511/http://www.bloomberg.com:80/news/2010-07-29/maoists-in-india-blow-up-pipelines-as-78-billion-in-resources-threatened.html.
- ↑ "Indian police battle Naxalites". Al Jazeera English. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
- ↑ "A Modern Insurgency: India's Evolving Naxalite Problem" (PDF). Archived (PDF) from the original on 10 August 2010. பார்க்கப்பட்ட நாள் 8 October 2010.
- ↑ India's Failing Counterinsurgency Campaign பரணிடப்பட்டது 2014-10-23 at the வந்தவழி இயந்திரம். Foreignpolicy.com. Retrieved on 2014-05-21.
- ↑ "India faces internal challenge from Maoist-Naxalites". பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
- ↑ 10.0 10.1 10.2 "Fatalities in Left-wing Extremism: 1999–2016* (MHA)". Archived from the original on 8 October 2017. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
- ↑ "India's Naxalites: A spectre haunting India". The Economist. 2006-04-12. http://www.economist.com/world/asia/displaystory.cfm?story_id=7799247. பார்த்த நாள்: 2009-07-13.
- ↑ Uppsala Conflict Data Program, Conflict Encyclopedia, India: government, Government of India - CPI-Maoist, Formation of CPI-Maoist and continued conflict, viewed 2013-05-29, http://www.ucdp.uu.se/gpdatabase/gpcountry.php?id=74®ionSelect=6-Central_and_Southern_Asia# பரணிடப்பட்டது 2013-02-03 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 13.0 13.1 Uppsala Conflict Data Program, Conflict Encyclopedia, India: government, Government of India - CPI-Maoist, Formation of CPI-Maoist and continued conflict, fatality estimates, viewed 2013-05-29,http://www.ucdp.uu.se/gpdatabase/gpcountry.php?id=74®ionSelect=6-Central_and_Southern_Asia# பரணிடப்பட்டது 2013-02-03 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Handoo, Ashook. "Naxal Problem needs a holistic approach". Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 2009-08-08.
- ↑ 15.0 15.1 Uppsala Conflict Data Program, Conflict Encyclopedia, India: government, Government of India - CPI-Maoist, Actor Information, CPI-Maoists, viewed 2013-05-29,http://www.ucdp.uu.se/gpdatabase/gpcountry.php?id=74®ionSelect=6-Central_and_Southern_Asia# பரணிடப்பட்டது 2013-02-03 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Primer: Who are the Naxalites?: Rediff.com news". Us.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2009-07-13.
- ↑ TNN (28 September 2010). "58% in AP say Naxalism is good, finds TOI poll". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 19 May 2017.
- ↑ "CENTRAL/S. ASIA – 'Maoist attacks' kill Indian police". Al Jazeera English. 2007-03-15. பார்க்கப்பட்ட நாள் 2009-07-13.
- ↑ "Communists Fight in India « Notes & Commentaries". Mccaine.org. பார்க்கப்பட்ட நாள் 2009-07-13.
- ↑ "Special project for Naxal areas to be extended to 18 more districts". The Times Of India (India). 2011-12-08 இம் மூலத்தில் இருந்து 2013-04-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130429194400/http://articles.timesofindia.indiatimes.com/2011-12-08/india/30490059_1_naxal-violence-districts-in-eight-states-integrated-action-plan. பார்த்த நாள்: 2012-01-02. டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாளில் நக்சலைட்டுகளுக்கு எதிரான ஒருங்கிணைந்த நடவடிக்கைத் திட்டம் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.
- ↑ Co-ordinated operations to flush out Naxalites soon தி எகனாமிக் டைம்ஸ், 6 February 2009.
- ↑ "Karnataka no longer Naxal infested". The Times Of India (India). 2010-08-26 இம் மூலத்தில் இருந்து 2011-11-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111127165135/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-26/hubli/28275788_1_police-station-naxal-activities-home-minister.
- ↑ Centre to declare more districts Naxal-hit. Indian Express (2011-07-05). Retrieved on 2014-05-21.
- ↑ Press Information Bureau English Releases. Pib.nic.in. Retrieved on 2014-05-21.
- ↑ "Development plan for Naxal-hit districts shows good response". The Times Of India (India). 2011-06-23 இம் மூலத்தில் இருந்து 2011-11-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111127161115/http://articles.timesofindia.indiatimes.com/2011-06-23/india/29694293_1_plan-for-naxal-hit-districts-plan-panel-member-secretary-development-plan.
வெளி இணைப்புகள்
[தொகு]- Data on Naxalite-Maoist Insurgency fatalities in India Institute for Conflict Management (South Asia), SATP
- Walking With The Comrades, An extended essay by Arundhati Roy on her interactions with naxalites
- The political economy of the Maoist conflict in India : an empirical analysis பரணிடப்பட்டது 2016-01-27 at the வந்தவழி இயந்திரம், Joseph Gomes (2013), University of Madrid, Spain
- Hearts and mines: A district-level analysis of the Maoist conflict in India பரணிடப்பட்டது 2016-01-27 at the வந்தவழி இயந்திரம், Kristian Hoelscher et al., University of Oslo, Norway, எஆசு:10.1177/2233865912447022
- Targets of Violence: Evidence from India’s Naxalite Conflict பரணிடப்பட்டது 2014-10-29 at the வந்தவழி இயந்திரம் Oliver Vanden Eynde (2013), Paris School of Economics
- Living on the edge of a disappearing world, 16 June 2011 14:56 IST, rediff.com