பிரவீன் தொகாடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரவீன் ஜெய் தொகாடியா
பிறப்பு 1957
குஜராத்
பணி விஷ்வ இந்து பரிசத்
சமயம் இந்து சமயம்

பிரவீன் தொகாடியா(Praveen Togadia), விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் தற்போதைய பொதுச் செயலாளராவார். 1957ல் குஜராத்தில் பிறந்த இவர் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறார். அகமதாபாத்தில் பள்ளி படிப்பை முடித்து, மருத்துவம் படித்தார். இளமைக் காலத்திலேயே ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் ஈடுபாடுகொண்டிருந்தார். 1979ல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பயிற்சி முகாம்களின் பயிற்சியாளராக பணியேற்றார். [1]

மதமாற்றத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இவர், இந்துத்துவ அமைப்பின் மூலம் வன்முறையைத் தூண்டுவதில்லை என்றும் சிறுபான்மையினருக்கு தான் எதிரானவரில்லை என்றும் கூறியுள்ளார். விஷ்வ ஹிந்து அமைப்பின் மூலம் சர்வதேச அளவில் இந்து சமயத்தவருக்காக குரல் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரவீன்_தொகாடியா&oldid=1368801" இருந்து மீள்விக்கப்பட்டது