சமசுகிருத பாரதி
Appearance
சமசுகிருத பாரதி சமசுகிருத மொழியை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் ஓர் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும். ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் துணை அமைப்பான சமசுகிருத பாரதி, பழங்கால வேதங்களைக் கொண்டிருக்கும் சமசுகிருத மொழியை வளர்ப்பதே இலக்காகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் தலைமையகம் தில்லியில் உள்ளது. இதற்கென தனியாக நூலகங்களும் ஆய்வகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சமசுகிருதப் பாடங்களை கற்பித்தும், நூல்களை வெளியிட்டும், போட்டிகளை வைத்தும் சமசுகிருத மொழியை மக்களின் பேச்சுமொழியாக மீளப் பெறுவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்கிறது.
2010 ஆம் ஆண்டிலிருந்து விக்கிபீடியாவின் சமஸ்கிருதப் பக்கங்களுக்கு (Sanskrit Wikipedia) இணைந்து உதவும் அமைப்பு.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]