தரம்பால்
தரம்பால் | |
---|---|
தரம்பால் | |
பிறப்பு | பெப்பிரவரி 19, 1922 கன்டாலா முசாபர்நகர் மாவட்டம் உத்தரப் பிரதேசம் இந்தியா |
இறப்பு | அக்டோபர் 24, 2006 சேவாகிராமம், மகாராஷ்டிரா |
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
வகை | கட்டுரைகள் |
கருப்பொருள் | சமூகவியல் வரலாறு அரசியல் |
இலக்கிய இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | அழகிய மரம்: 18ஆம் நூற்றாண்டில் இந்திய பாரம்பரியக் கல்வி, இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் |
தரம்பால் (ஆங்கிலம்: Dharampal, பிறப்பு:பெப்ரவரி 19,1922 - இறப்பு: அக்டோபர் 24, 2006) உத்தரப் பிரதேசத்தில் பிறந்த காந்தியவாதி, வரலாற்று ஆய்வாளர் மற்றும் அரசியல் மெய்யியலாளர் ஆவார். இந்தியாவின் பல்வேறு வகையான மக்களிடையே பல்வேறு வழிகளில் தொடர்பு கொண்டு மீளுருவாக்க பணிகளில் ஈடுபட்டுள்ளார். பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளைப் பற்றிய ஆவணங்களை ஆராய்ந்து புத்தகங்கள் எழுதி உள்ளார்.
வாழ்க்கை
[தொகு]தரம்பால் உத்தரப் பிரதேசம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கன்டாலா எனப்படும் சிறிய நகரத்தில் பிப்ரவரி 19, 1922 அன்று பிறந்தார்.இவர் இளைஞர்களுக்குக் காந்தி விடுத்த அழைப்பை ஏற்றுத் 1942-43ல் தன் பட்டப் படிப்பைப் பாதியில் விட்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.அவர் 1948 ஆம் ஆண்டு இந்திய கூட்டுறவு சங்கத்தின்( Indian Cooperative Union) ஒரு நிறுவன உறுப்பினராக இருந்தார். 2006 ஆம் ஆண்டு மஹாராஷ்டிராவில் உள்ள சேவாகிராம ஆசிரமத்தில் உயிர் நீத்தார்.[1]
பணிகள்
[தொகு]காந்தியடிகளின் சீடர்களுள் ஒருவரான மீரா பென் னுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அப்போது இந்தியப் பஞ்சாயத்து பரிஷத் மற்றும் தன்னார்வக் குழுக்களின் கிராமப் புனர்நிர்மாணப் பணிகளுக்கான அமைப்பு (AVARD)ல் 1958 முதல் 1964 வரை அவர் பொது செயலாளராக பணியாற்றியுள்ளார்.
இவரது புத்தகங்கள்
[தொகு]- அழகிய மரம்: 18ஆம் நூற்றாண்டில் இந்திய பாரம்பரியக் கல்வி (நூல்)
- 18ஆம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் (நூல்)
வெளியிணைப்புகள்
[தொகு]உசாத்துனைகள்
[தொகு]- ↑ "மறைந்த விருட்சம்". Archived from the original on 2014-02-14. பார்க்கப்பட்ட நாள் 2014-02-10.