முசாபர்நகர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முசாபர்நகர் மாவட்டம்
मुज़फ़्फ़रनगर ज़िला
مُظفٌر نگر ضلع
Uttar Pradesh district location map Muzaffarnagar.svg
முசாபர்நகர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்சகாரன்பூர் கோட்டம்
தலைமையகம்முசாபர்நகர்
பரப்பு2,991 km2 (1,155 sq mi)
மக்கட்தொகை4143512 (2011)
படிப்பறிவு69.12%
பாலின விகிதம்1000 ஆண்களுக்கு 889 பெண்கள்
வட்டங்கள்4
மக்களவைத்தொகுதிகள்முசாபர்நகர், கைரானா
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைகைரானா, தானா பவன், ஷாம்லி, புடானா, சர்தாவல், முசாபர்நகர், கதவுலி, புர்காசி, மீராப்பூர்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

முசாபர்நகர் மாவட்டம் இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டத்தின் தலைமையிடம் முசாபர்நகர் ஆகும்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

2991 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் முசாபர்நகர், புதானா, ஜன்சத் மற்றும் கதௌலி என நான்கு வருவாய் வட்டங்களும், 704 வருவாய் கிராமங்கள், 10 உள்ளாட்சி அமைப்புகள், 9 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 21 காவல் நிலையங்கள் கொண்டுள்ளது.

அரசியல்[தொகு]

இந்த மாவட்டத்தில் கைரானா, தானா பவன், ஷாம்லி, புடானா, சர்தாவல், முசாபர்நகர், கதவுலி, புர்காசி, மீராப்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.[1] இந்த மாவட்டத்தின் பகுதிகள் முசாபர்நகர், கைரானா ஆகிய மக்களவைத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2991 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட முசாபர்நகர் மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 41,43,512 ஆகும். அதில் ஆண்கள் 21,93,434; பெண்கள் 19,50,078 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 69.12% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6,46,062 ஆகவுள்ளனர்.

மக்கள்தொகையில் இந்துக்கள் 57.51 %, இசுலாமியர்கள் 41.30 %, சீக்கியர்கள் 0.45 %, கிறித்தவர்கள் 0.16 %, சமணர்கள் 0.39 %, மற்றவர்கள் 0.19% ஆகவுள்ளனர். [2]இம்மாவட்டத்தில் இந்தி மொழி 87.02% மற்றும் உருது மொழி 12.58% மக்களால் முதல் மொழியாகப் பேசப்படுகிறது.

மேலும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 29°27′N 77°35′E / 29.450°N 77.583°E / 29.450; 77.583