மிர்சாபூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிர்சாபூர் மாவட்டம்
मीरज़ापुर ज़िला
مرزا پور ضلع
India Uttar Pradesh districts 2012 Mirzapur.svg
மிர்சாபூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்மிர்சாபூர்
தலைமையகம்மிர்சாபூர்
பரப்பு4,521 km2 (1,746 sq mi)
மக்கட்தொகை2,494,533 (2011)
வட்டங்கள்4
மக்களவைத்தொகுதிகள்மிர்சாபூர்
சராசரி ஆண்டு மழைபொழிவு1043 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மிர்சாபூர் மாவட்டம் (இந்தி: मीरज़ापुर ज़िला, உருது: مرزا پور ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் மிர்சாபூர் நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பு 4521 km2. இம்மாவட்டம் மிர்சாபூர் பிரிவின் கீழ் அமைந்துள்ளது.

பிரிவுகள்[தொகு]

இம்மாவட்டம் மிர்சாபூர், லால்கஞ், மரிஹன், சுனர் என நான்கு வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு வட்டங்களும் பனிரெண்டு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம்[தொகு]

2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மிர்சாபூர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி மிர்சாபூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,494,533.[2] இது தோராயமாக குவைத் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 174வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 561 inhabitants per square kilometre (1,450/sq mi).[2] மேலும் மிர்சாபூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.89%.[2]மிர்சாபூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் மிர்சாபூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 70.38%.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. ஏப்ரல் 5, 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. September 27, 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in. 2011. 2011-09-30 அன்று பார்க்கப்பட்டது.
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". 2011-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-10-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
mirzapur
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிர்சாபூர்_மாவட்டம்&oldid=3385079" இருந்து மீள்விக்கப்பட்டது