உள்ளடக்கத்துக்குச் செல்

அமீர்ப்பூர் மாவட்டம், உத்தரப்பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமீர்ப்பூர் மாவட்டம்
हमीरपुर जिला
அமீர்ப்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்சித்திரக்கூடம்
தலைமையகம்அமீர்ப்பூர், உத்தரப்பிரதேசம்
பரப்பு4,121.9 km2 (1,591.5 sq mi)
மக்கட்தொகை1042374 (2001)
நகர்ப்புற மக்கட்தொகைரத் , மௌடகா, சரிலா, கோகாந்து, சுமேர்பூர், குரரா, மஸ்காரா, இமிலியா
வட்டங்கள்அமீர்ப்பூர், ரத், மௌடகா, சாரிலா,
மக்களவைத்தொகுதிகள்அமீர்ப்பூர்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைஅமீர்ப்பூர், ரத்
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 86
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

அமீர்ப்பூர் மாவட்டம் (இந்தி: हमीरपुर जिला) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 71 மாவட்டங்களில் ஒன்றாகும். அமீர்ப்பூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகராகும். இம்மாவட்டம் சித்திரக்கூட பிரிவின் கீழ் அமைந்துள்ளது. அமீர்ப்பூர் மாவட்டத்தின் பரப்பு 4,121.9 கி.மீ.². இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 1,042,374 (2001 கணக்கெடுப்பு). உத்தரப் பிரதேசத்தின் 71 மாவட்டங்களில், 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, மகோபா மற்றும் சித்திரக்கூட மாவட்டங்களுக்கு பிறகு, மூன்றாவது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் இதுவாகும்.[1]

பொருளாதாரம்

[தொகு]

2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அமீர்ப்பூர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[2] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2]

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி அமீர்ப்பூர் மாவட்டம் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,104,021.[1] இது தோராயமாக சைப்ரஸ் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 417வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 268 inhabitants per square kilometre (690/sq mi).[1] மேலும் அமீர்ப்பூர் மாவட்டம் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 5.78%.[1] அமிர்ப்பூர் மாவட்டம் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 860 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் அமீர்ப்பூர் மாவட்டம் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 70.16%.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 5 6 7 "District Census 2011". Census2011.co.in. 2011. Retrieved 2011-09-30.
  2. 1 2 Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).
  3. Lua error in Module:Citation/CS1 at line 2548: attempt to call field 'is_valid_date' (a nil value).