அலகாபாத் மாவட்டம்
பிரயாக்ராஜ் (பழைய பெயர் அலகாபாத்) மாவட்டம் | |
---|---|
பிரயாக்ராஜ் (பழைய பெயர் அலகாபாத்)மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப்பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | பிரயாக்ராஜ் கோட்டம் |
தலைமையகம் | [[பிரயாக்ராஜ் பழைய பெயர் அலகாபாத்]] |
பரப்பு | 5,424 km2 (2,094 sq mi) |
மக்கட்தொகை | 4,941,510 (2001) |
மக்கள்தொகை அடர்த்தி | 911/km2 (2,360/sq mi) |
மக்களவைத்தொகுதிகள் | அலகாபாத், பகல்பூர் |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தே.நெ 2 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பிரயாக்ராஜ் மாவட்டம் இதன் பழைய பெயர் அலகாபாத் மாவட்டம், வட இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாவட்டங்களுள் ஒன்று. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் பிரயாக்ராஜ் ஆகும். மேலும் இம்மாவட்டம் பிரயாக்ராஜ் கோட்டத்தின் கீழ் அமைந்துள்ளது. அக்டோபர், 2018-இல் இம்மாவட்டத்தின் பெயர் பிரயாக்ராஜ் மாவட்டம் என உத்தரப் பிரதேச் அரசு மாற்றியது.[1][2]
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இம்மாவட்டம் உத்தரப்பிரதேசத்தின் 71 மாவட்டங்களில் மிக அதிக மக்கட்தொகை கொண்ட மாவட்டம் ஆகும்.[3] இந்துக்களின் புனிதமான நகரமான பிரயாகையில், கங்கை, யமுனை, சரஸ்வதி, ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கின்றன.
கும்ப மேளா
[தொகு]கங்கை, யமுனை ஆறு மற்றும் கண்ணுக்குப் புலப்படாத சரசுவதி ஆறும் கூடும் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) உள்ள திரிவேணி சங்கமத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி அலாகாபாத் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 5,959,798.[3] இது தோராயமாக எரித்திரியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[4] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 13வது இடத்தில் உள்ளது.[3] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,087 inhabitants per square kilometre (2,820/sq mi).[3] மேலும் அலாகாபாத் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 20.74%.[3] அலாகாபாத் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 902 பெண்கள் உள்ளனர்.[3] மேலும் அலாகாபாத் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 74.41%.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Uttar Pradesh Cabinet approves renaming of Allahabad to Prayagraj
- ↑ After Allahabad, Yogi Adityanath renames UP's Faizabad district as Ayodhya
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.