ஔரையா மாவட்டம்
ஔரையா மாவட்டம் औरैया जिला | |
---|---|
![]() ஔரையாமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | கான்பூர் |
தலைமையகம் | ககோர் புசுர்க் |
பரப்பு | 2,054 km2 (793 sq mi) |
மக்கட்தொகை | 1,372,287 (2011) |
மக்களவைத்தொகுதிகள் | கன்னவுச்சு |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
ஔரையா மாவட்டம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. ஔரையா நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.[1]
வரலாறு[தொகு]
17 செப்டம்பர் 1997 அன்று ஔரையா மற்றும் பிதுனா வட்டங்கள் ஏட்டாவா மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய ஔரையா மாவட்டம் உருவாக்கப்பட்டது.
பொருளாதாரம்[தொகு]
திபயாபூர் ஆனது இம்மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க தொழில் நகரம் ஆகும். இங்கு பொதுத்துறை நிறுவனங்களான என்டிபிசியின் 663 MW மின்நிலையம்,[2] பெட்ரோலிய வேதிப்பொருள் ஆலை மற்றும் கெய்ல் நிறுவனத்தின் எரிவாயு அமுக்கி நிலையம் ஆகியவை அமைந்துள்ளன.[3]
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ஔரையா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,372,287.[4] இது தோராயமாக சுவாசிலாந்து நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[5] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 357வது இடத்தில் உள்ளது.[4] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 681 inhabitants per square kilometre (1,760/sq mi).[4] மேலும் ஔரையா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 16.3%.[4]ஔரையா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 864 பெண்கள் உள்ளனர்.[4] மேலும் ஔரையா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 80.25%.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2009-10-25 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/query?url=http://www.geocities.com/anjan_kumar_pal/countryside.html&date=2009-10-25+12:28:49.
- ↑ "NTPC" இம் மூலத்தில் இருந்து 2009-10-25 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/query?url=http://www.geocities.com/anjan_kumar_pal/NTPC_Auraiya.html&date=2009-10-25+12:28:44.
- ↑ "GAIL" இம் மூலத்தில் இருந்து 2009-10-25 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/query?url=http://www.geocities.com/anjan_kumar_pal/GAIL_Auraiya.html&date=2009-10-25+12:28:39.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "District Census 2011". Census2011.co.in. 2011. http://www.census2011.co.in/district.php. பார்த்த நாள்: 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population" இம் மூலத்தில் இருந்து 2011-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110927165947/https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html. பார்த்த நாள்: 2011-10-01.