உள்ளடக்கத்துக்குச் செல்

கான்பூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கான்பூர் மாவட்டம்
कानपुर नगर जिला
کان پور شہر ضلع
கான்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்கான்பூர்
தலைமையகம்கான்பூர்
பரப்பு3,029 km2 (1,170 sq mi)
மக்கட்தொகை4,572,951 (2011)
படிப்பறிவு81.31%.[1]
மக்களவைத்தொகுதிகள்கான்பூர்
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ 2
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கான்பூர் மாவட்டம் (கான்பூர் நகர் மாவட்டம்) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கான்பூர் நகரம் ஆகும். இம்மாவட்டம் கான்பூர் பிரிவின் கீழ் அமைத்துள்ளது. மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக நிர்வாகத்தை செம்மைப்படுத்த இம்மாவட்டம் கான்பூர் நகர் மற்றும் கான்பூர் தேகத் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கான்பூர் என்பது பொதுவாக இவ்விரு மாவட்டங்களையும் குறிக்கும்.

வரலாறு

[தொகு]

கான்பூர் மாவட்டம் 1977ல் கான்பூர் நகர் மற்றும் கான்பூர் தேகத் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. பின்னர் 1979ல் மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டது. மீண்டும் 1981ல் இரண்டாக பிரிக்கப்பட்டது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி கான்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 4,572,951.[1] இது தோராயமாக கோஸ்ட்டா ரிக்கா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 32வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,449 inhabitants per square kilometre (3,750/sq mi).[1] மேலும் கான்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001–2011 காலகட்டத்தில் 9.72%.[1]கான்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 852 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் கான்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 81.31%.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்பூர்_மாவட்டம்&oldid=3862647" இலிருந்து மீள்விக்கப்பட்டது