உள்ளடக்கத்துக்குச் செல்

பிலிபித் மாவட்டம்

ஆள்கூறுகள்: 28°33′N 80°06′E / 28.550°N 80.100°E / 28.550; 80.100
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலிபித்
पीलीभीत जिला
மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் பிலிபித் மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் பிலிபித் மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
தலைமையிடம்பிலிபித்
கோட்டம்பரேலி கோட்டம்
பிராந்தியம்ரோகில்கண்ட்
பரப்பளவு
 • மொத்தம்3,686 km2 (1,423 sq mi)
ஏற்றம்
172 m (564 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்20,31,007
 • அடர்த்தி551/km2 (1,430/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
262001
தொலைபேசி குறியீட்டெண்05881, 05882
வாகனப் பதிவுUP-26
பாலின விகிதம்895 /
மழைப் பொழிவு780 மில்லிமீட்டர்கள் (31 அங்)
சராசரி கோடை வெப்பம்36.8 °C (98.2 °F)
சராசரி குளிர்கால வெப்பம்14.5 °C (58.1 °F)
இணையதளம்www.pilibhit.nic.in

பிலிபித் மாவட்டம் (Pilibhit district) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 70 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பிலிபித் ஆகும். இது பரேலி கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் இந்திய - நேபாள எல்லையில் அமைந்த உத்தரப் பிரதேச மாவட்டங்களில் ஒன்றாகும்.

இந்திய அரசின் அமைச்சர் மேனகா காந்தி பிலிபித் மக்களவைத் தொகுதியிலிருந்து ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1947-ஆம் ஆண்டில் இந்தியப் பிரிவினைக்கு பின்னர் வங்காள மக்களும், சீக்கிய மக்களும் அதிகமாக குடியேறி வாழும் உத்தரப் பிரதேச மாவட்டங்களில் பிலிபித் மாவட்டமும் ஒன்றாகும்.

இம்மாவட்டத்தில் புலிகள் காப்பகம் செப்டம்பர் 2008-இல் துவக்கப்பட்டது.[1]

மாவட்ட அமைவிடம்[தொகு]

பிலிபித் மாவட்டத்தின் வடகிழக்கில் நேபாளம், கிழக்கில் லக்கிம்பூர் கேரி மாவட்டம், வடமேற்கில் உதம்சிங் நகர் மாவட்டம் மற்றும் உத்தராகண்டம் மாநிலம், தெற்கில் ஷாஜகான்பூர் மாவட்டம், மேற்கில் பரேலி மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

பிலிபித் மாவட்டம் பிலிபித், புராண்பூர் மற்றும் பிசால்பூர் என மூன்று வருவாய் வட்டங்களையும், அமாரியா, மரௌரி, ல்லௌரிகேரா, பர்கேரா, பில்சந்தா, பிசால்பூர் மற்றும் புராண்பூர் என ஏழு ஊராட்சி ஒன்றியங்களையும், பிலிபித் நகரம் 52 உறுப்பினர்களைக் கொண்ட மாநகராட்சி மன்றம் கொண்டுள்ளது. மேலும் ஒன்பது நகராட்சிகளும் இம்மாவட்டம் கொண்டுள்ளது.

பொருளாதாரம்[தொகு]

நீர் வளம் மிக்க இம்மாவட்டத்தில் அதிகாக கரும்பு பயிரிடப்படுவதால், இம்மாவட்டத்தில் நான்கு சர்க்கரை ஆலைகள் உள்ளது. மேலும் நெல் அரவை ஆலைகள், செங்கல் சூலைகள், மதுபானத் தொழிற்சாலைகள், மாவு ஆலைகள் மற்றும் பன்சூரி வகை புல்லாங்குழல் தயாரிக்கும் ஆலையும் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

புதுதில்லியிலிருந்து சாலை வழியாக 274 கி மீ தொலைவிலும், மாநிலத் தலைநகர் லக்னோவிலிருந்து சாலை வழியாக 270 கி மீ தொலைவிலும்; இருப்புப்பாதை வழியாக 259 கி மீ தொலைவிலும் பிலிபத் நகரம் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,031,007 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 82.70% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 17.30% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 23.45% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,072,002 ஆண்களும் மற்றும் 959,005 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 895 பெண்கள் வீதம் உள்ளனர். 3,686 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 551 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 61.47% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 71.70% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 50.00% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 304,920 ஆக உள்ளது. [2]

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,449,007 (71.34 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 489,686 (24.11 %) ஆகவும், சீக்கிய, மக்கள் தொகை 84,787 (4.17 %) ஆகவும் மற்றும் கிறித்தவ, பௌத்த, சமண சமய மக்கள் தொகை கணிசமாகவும் உள்ளது.

மொழிகள்[தொகு]

உத்தரப் பிரதேச பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிபித்_மாவட்டம்&oldid=3947702" இலிருந்து மீள்விக்கப்பட்டது