பிஜ்னோர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிஜ்னோர் மாவட்டம், இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைநகரம் பிஜ்னோர். இங்கு வாழும் மக்கள் இந்தி மொழியின் மேற்கு வட்டார வழக்கில் பேசுகின்றனர்.

அரசியல்[தொகு]

இந்த மாவட்டத்தில் நசீபாபாத், நகீனா, படாபூர், தாம்பூர், நகடவுர், பிஜ்னோர், சாந்துப்பூர், நூர்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1] இந்த மாவட்டத்தில் நகீனா, முராதாபாத், பிஜ்னோர் ஆகிய மக்களவைத் தொகுதிகள் உள்ளன.[1]

சுற்றுலா[தொகு]

புராணக் கதைமாந்தரான விதுரர் இங்கு வாழ்ந்ததாக நம்புகின்றனர். இந்த இடம் விதுர் குடி என்று அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்திற்குள்ளும் கங்கை பாய்கிறது. இசுலாமியர் ஆட்சியின் போது கட்டப்பட்ட நசிபுதுல்லா கோட்டை, நசிதாபாத் நகரில் உள்ளது. கீரத்பூர் என்ற ஊருக்கு அருகில் புலி சரணாலயம் உள்ளது. பகுவாலா என்ற ஊரில் கல் உடைக்கும் ஆலை உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள சிற்றூர்களில் சிறிய கோயில்களும், மசூதிகளும் அதிகளவில் காணப்படுகின்றன.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-02-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜ்னோர்_மாவட்டம்&oldid=3249831" இருந்து மீள்விக்கப்பட்டது