ஹாப்பூர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 28°43′51″N 77°46′33″E / 28.7309°N 77.7757°E / 28.7309; 77.7757
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாப்பூர் மாவட்டம்
ஹாப்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்மீரட் கோட்டம்
தலைமையகம்ஹாப்பூர்
வட்டங்கள்3
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஹாப்பூர் மாவட்டம் (Hapur district), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 75 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் ஹாப்பூர் ஆகும். இது மீரட் கோட்டத்தில் அமைந்துள்ளது. ஹாப்பூர் நகரம் தேசிய தலைநகர வலையத்துள் அமைந்துள்ளது.

காசியாபாத் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, 28 செப்டம்பர் 2011 அன்று பஞ்சசீல நகர் மாவட்டம் [1]என்ற பெயரில் துவக்கப்பட்ட இம்மாவட்டத்தின் பெயரை சூலை 2012 அன்று ஹாப்பூர் மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2]

ஹாப்பூர் மாவட்டம் ஹாப்பூர், கர்முக்தேஸ்வர், தௌலானா என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டது.


ஹாப்பூர் நகரத்தின் மக்கள்தொகை 13,28,322 ஆகும். இந்நகரம் எஃகு குழாய், குழல் வடிவ எஃகு குழாய் உற்பத்தி செய்யும் மையமாக உள்ளது. மேலும் அப்பளம், கூம்பு வடிவமும், குழல் வடிவமும் அமையப்பெற்ற காகிதப் பொருட்களுக்கு பெயர் பெற்றது. ஹாப்பூர் நகரம் புது தில்லி நகரத்திலிருந்து கிழக்கே 60 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 24 தில்லி - லக்னோவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 24 ஹப்பூர் நகரத்தின் வழியாக செல்கிறது.

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவர் மற்றும் இசுலாமிய சமயத்தவர் கூடுதலாகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த, சமண சமய மக்கள் குறைவான எண்ணிக்கையிலும் உள்ளனர்.

மொழிகள்[தொகு]

உத்தரப் பிரதேச பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருதும், வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாப்பூர்_மாவட்டம்&oldid=3778488" இருந்து மீள்விக்கப்பட்டது