மொராதாபாத் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொராதாபாத் மாவட்டம் மாவட்டம்
मोरादाबाद ज़िला
مراد آباد ضلع
மொராதாபாத் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்மொரதாபாத் கோட்டம்
தலைமையகம்மொரதாபாத்
பரப்பு3,493 km2 (1,349 sq mi)
மக்கட்தொகை2,761,620 (2001)
படிப்பறிவு45.74 per cent[1]
மக்களவைத்தொகுதிகள்மொரதாபாத், சம்பல்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மொரதாபாத் மாவட்டம் என்பது இந்தியாவின் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில் ஒன்று. இது மொரதாபாத் கோட்டத்திற்கு உட்பட்டது. [2]

இந்த நகரம், ஷாஜகான் என்ற இசுலாமிய அரசரின் மகன் முரத் என்பவரால் 1600 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இவரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. இது தேசியத் தலைநகரான தில்லியில் இருந்து 167 km (104 mi) தொலைவில் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உலோகக் கலவைப் பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. இதன் பரப்பளவு 3493 கி.மீ2 ஆகும். முக்கியமான தொழிற்சாலைகள் பலவும் இங்குள்ளன. இம்மாவட்டத்தில் 46 % முஸ்லிம்கள் ஆவர். இந்தியாவின் சிறுபான்மையினர் மாவட்டங்களில் இதுவும் ஒன்றாக அறியப்பட்டுள்ளது. [3]

அரசியல்[தொகு]

இந்த மாவட்டத்தை காண்ட் சட்டமன்றத் தொகுதி, டாகுர்துவாரா சட்டமன்றத் தொகுதி, முராதாபாத் ஊரகம் சட்டமன்றத் தொகுதி, முராதாபாத் நகரம் சட்டமன்றத் தொகுதி, குந்தர்க்கி சட்டமன்றத் தொகுதி, பிலாரி சட்டமன்றத் தொகுதி, சந்தவுசி சட்டமன்றத் தொகுதி, அசுமோலி சட்டமன்றத் தொகுதி, சம்பல் சட்டமன்றத் தொகுதி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[4] இந்த சட்டமன்றத் தொகுதிகள் மொராதாபாத், சம்பல் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் அடங்குகின்றன.

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொராதாபாத்_மாவட்டம்&oldid=3569057" இருந்து மீள்விக்கப்பட்டது