பலியா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலியா மாவட்டம்
बलिया ज़िला
بالیا ضلع
பலியாமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம்
மாநிலம்உத்தரப்பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஆசம்கர்
தலைமையகம்பலியா
பரப்பு1,981 km2 (765 sq mi)
மக்கட்தொகை3,223,642 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,081/km2 (2,800/sq mi)
மக்களவைத்தொகுதிகள்Ballia, Salempur
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பலியா மாவட்டம் (இந்தி: बलिया ज़िला, உருது: بالیا ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களுள் ஒன்று. இம்மாவட்டம் ஆசம்கர் பிரிவின் கீழ் உள்ளது.இது உத்தரப் பிரதேசத்தின் கிழக்கில் அமைந்துள்ளது. இம்மாவட்ட மக்களின் முக்கிய தொழில் விவசாயம். பலியா நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் மற்றும் வணிகச் சந்தையாகும்.

வரலாறு[தொகு]

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் போரின் நாயகருமான மங்கள் பாண்டே இவ்வூரில் பிறந்தவர் ஆவார். முன்னாள் இந்தியப் பிரதமர் சந்திர சேகரும் இம்மாவட்டத்தின் இப்ராஹிம்பட்டியில் பிறந்தவர்.

மொழிகள்[தொகு]

பீகாரி மொழிக்குடும்பத்தில் 40 000 000 பேர்கள் பேசக்கூடிய போஜ்புரி மொழியானது ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள மக்களால் அதிகமாக பேசப்படுகிறது.[1]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி பலியா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,223,642.[2] இது தோராயமாக மூரித்தானியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 108வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,081 inhabitants per square kilometre (2,800/sq mi).[2] மேலும் பலியா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 16.73%.[2]பலியா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் பலியா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 73.82%.[2]

வெளியிணைப்புகள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhojpuri: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-30. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in. 2011. http://www.census2011.co.in/district.php. பார்த்த நாள்: 2011-09-30. 
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population" இம் மூலத்தில் இருந்து 2011-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110927165947/https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html. பார்த்த நாள்: 2011-10-01. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலியா_மாவட்டம்&oldid=3562144" இருந்து மீள்விக்கப்பட்டது