சோன்பத்ரா மாவட்டம்
ஆள்கூறுகள்: 24°41′23″N 83°3′55″E / 24.68972°N 83.06528°E
சோன்பத்ரா மாவட்டம் सोनभद्र ज़िला | |
---|---|
சோன்பத்ராமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | மிர்சாபூர் |
தலைமையகம் | இராபர்ட்கஞ்ச் |
பரப்பு | 6,788 km2 (2,621 sq mi) |
மக்கட்தொகை | 1,862,559 (2011) |
படிப்பறிவு | 64% |
பாலின விகிதம் | 918 |
வட்டங்கள் | 3 |
மக்களவைத்தொகுதிகள் | 1 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 3 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 7 தேசிய நெடுஞ்சாலை 75 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
சோன்பத்ரா மாவட்டம் (Sonbhadra or Sonebhadra) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 70 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் இராபர்ட்கஞ்ச் ஆகும். இது மிர்சாபூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. 6788 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம், உத்தரப் பிரதேச மாநிலத்தின் இரண்டாவது பெரிய மாவட்டமாகும். இம்மாவட்டம் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் பிகார் மாநிலங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
அமைவிடம்[தொகு]
விந்திய மலைத்தொடர் மற்றும் கைமூர் மலைகளுக்கு இடையே அமைந்த சோன்பத்ரா மாவட்டம் அமைந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் வடமேற்கில் மிர்சாபூர் மாவட்டம், வடக்கில் சந்தௌலி மாவட்டம், வடகிழக்கில் பிகார் மாநிலத்தின் கைமூர் மாவட்டம் மற்றும் ரோத்தாஸ் மாவட்டம், கிழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தின் காட்வா மாவட்டம், தெற்கில் சத்தீஸ்கர் மாநிலத்தின் கோரியா மாவட்டம் மற்றும் சர்குஜா மாவட்டம் மற்றும் மேற்கில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சிங்கரௌலி மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம்[தொகு]
இம்மாவட்டம் இராபர்ட்கஞ்ச், கோராவால், துத்தி என மூன்று வருவாய் வட்டங்களையும், இராபர்ட்கஞ்ச், கோராவால், ஒப்ரா மற்றும் துத்தி என மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும்; இராபர்ட்கஞ்ச் எனும் ஒரு மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது.
பொருளாதாரம்[தொகு]
அலுமினியம், சுண்ணாம்புக்கற்கள், நிலக்கரி போன்ற கனிமச் சுரங்கங்கள் மிகுந்து உள்ளதால், இம்மாவட்டத்தில் அனல் மின் நிலையங்கள், அலுமினியம், சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது.
புவியியல்[தொகு]
விந்திய மலைத்தொடர்களுக்கும் கைமூர் மலைகளுக்கும் இடையே அமைந்த இம்மாவட்டத்தின், மேற்கிலிருந்து கிழக்காக சோன் ஆறு பாய்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் சர்குஜா மாவட்டத்திலிருந்து பாயும் ரிகண்ட் ஆறு சோன் ஆற்றில் கலக்கிறது.
போக்குவரத்து[தொகு]
கன்னியாகுமரி - வாரணாசி நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7 மற்றும் குவாலியர் - ஒரிசாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 75 இம்மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது.
மக்கள் தொகையியல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்ட மக்கள்தொகை 1,862,559 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 971,344 ஆகவும்; பெண்கள் 891,215 ஆகவும் உள்ளனர். [1] 6788 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள்தொகை அடர்த்தி 270 ஆகும். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 27.27% ஆக உயர்ந்துள்ளது.[1]மக்கள்தொகையில் பட்டியல் சமூக மக்கள் 22.6% ஆகவும்; பட்டியல் பழங்குடி மக்கள் 20.7% ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 323,092 ஆக உள்ளது. மாவட்டத்தின் சராசரி எழுத்தறிவு 64% ஆகவும்; ஆண்களின் எழுத்தறிவு 74.92% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 52.14% ஆகவும் உள்ளது.
சமயம்[தொகு]
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவர்கள் 93.5% ஆகவும்; இசுலாமிய சமயத்தவர்கள் 6% ஆகவும் உள்ளனர். பிற சமயத்தவர்கள் மிகக் குறைந்த அளவில் உள்ளனர்.
மொழிகள்[தொகு]
உத்தரப் பிரதேச பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார பழங்குடியின மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
மிர்சாபூர் மாவட்டம் | சந்தௌலி மாவட்டம் | கைமூர் மாவட்டம் ரோத்தஸ் மாவட்டம் பிகார் |
![]() |
சிங்கரௌலி மாவட்டம், மத்தியப் பிரதேசம் | ![]() |
காட்வா மாவட்டம், ஜார்கண்ட் | ||
| ||||
![]() | ||||
சர்குஜா மாவட்டம், சத்தீஸ்கர் |