பரூக்காபாது மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரூக்காபாத் மாவட்டம் (Farrukhabad district) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் பரூக்காபாத் ஆகும். இம்மாவட்டம் கான்பூர் பகுதியின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 2,279 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இம்மாவட்டத்தில் மூன்று தாலுகாக்கள் உள்ளன. இம்மாவட்டத்தில் பதேகர் இராணுவப் பாசறை மன்றம் உள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 18,87,577 ஆகும்.[1] இம்மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 865 நபர்கள் ஆகும்.[1] மக்கள்தொகை வளர்ச்சி (2001–2011) 20.2% ஆகும்.[1] ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 874 பெண்கள் ஆகும்.[1] கல்வியறிவு 70.57% ஆக உள்ளது.[1]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரூக்காபாது_மாவட்டம்&oldid=3924429" இலிருந்து மீள்விக்கப்பட்டது