திரிவேணி சங்கமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திரிவேணி சங்கமத்தில் இறையன்பர்கள்

திரிவேணி சங்கமம் எனும் வடமொழிச் சொல்லுக்கு மூன்று ஆறுகள் கூடுமிடம் என்று பொருள்.

அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் எனுமிடத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் கட்புலனாகாத சரசுவதி ஆறும் வந்து கலப்பதாக நம்பப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இடத்தில் கும்பமேளா நிகழ்த்தப்படுகிறது. மகாத்மா காந்தி உட்படப் பல இந்தியத் தலைவர்களின் அஸ்தி இங்கு கரைக்கப்பட்டுள்ளது.

புனிதக்குளியல்[தொகு]

கரையிலிருந்து படகில் பக்தர்களை அழைத்துச் செல்கின்றார்கள். கங்கையும், யமுனையும் கூடுமிடத்தில் ஆங்காங்கு படகுகளை நிற்கவைத்து பக்தர்களை இறங்கி புனித நீராடும்படி கூறுகிறார்கள். நின்று நீராடும் அளவு நீர் குறைவாக சில இடங்களில் உள்ளது. சில ப்டகுக்காரர்கள் படகுகளுக்கிடையில் கயிற்றினைக் கட்டி அதனைப் பிடித்துக்கொண்டு பக்தர்களை சங்கமிக்கும் இடம் எனப்படும இடத்தில் இறங்கச்சொல்லி புனித நீராட வைக்கிறார்கள். அவரவர் விருப்பத்திற்கேற்ப புனிதக்குளியலில் ஈடுபடுகிறார்கள். படகுகளில் பக்தர்கள் ஒவ்வொரு குழுவாக ஏறிச்சென்று சங்கமிக்கும் இடத்திற்குச் சென்றுவருகின்றனர். படகுகளில் பக்தர்கள் ஏறிச்செல்லும்போதும் பின்னர் புனித நீராடிவிட்டுத் திரும்பி வரும்போதும் காணும் காட்சிகள் மனதிற்கு ரம்மியமாக உள்ளன.


படத்தொகுப்பு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிவேணி_சங்கமம்&oldid=3311775" இருந்து மீள்விக்கப்பட்டது