உள்ளடக்கத்துக்குச் செல்

கைரானா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைரானா சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதி. இது கைரானா பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • கைரானா வட்டத்தில் உள்ள உன் கனுங்கோ வட்டத்தின் ககோர், உன், சவுசனா-1, சவுசனா-2, தோடா, கோத்சமா, சாம்லி-சாம்லா, பல்லமஜரா, பஜேரி, கேரா பவூ, நை நங்குலா, தத்தேரா, பஹேடா, சகோட்டி, உத்பூர், மச்சுரவுலி, லவா தாவுத்பூர் ஆகிய பத்வார் வட்டங்கள்.
  • கைரானா வட்டத்தில் உள்ள ஜிஞ்சனா கனுங்கோ வட்டம்,
  • கைரானா வட்டத்தில் உள்ள கைரானாவின் 1 முதல் 4 வரையிலான பத்வார் வட்டங்கள்
  • கைரானா வட்டத்தில் உள்ள கைரானா கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட மொகமத்பூர் ராய், ராம்ரா, பஞ்சீத், மமவுர், தீதர்வடா, உஞ்சகாவ், ஐராட்டி, கண்டேலா, துந்துகேடா, இசோபூர் ஆகிய பத்வார் வட்டங்கள்
  • கைரானா வட்டத்தில் உள்ள உன் நகராட்சி, ஜிஞ்சனா நகராட்சி, கைரானா நகராட்சி ஆகியன.

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

இந்த தொகுதியில் இருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

  • உத்தரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்றத்தில், இந்த தொகுதியை ஹுக்கும் சிங் முன்னிறுத்துகிறார்.[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-14.
  2. "தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம்". Archived from the original on 2015-08-13. பார்க்கப்பட்ட நாள் 2015-02-01.