காஜா முகையதீன் சிஷ்தி, அஜ்மீர்
Appearance
காஜா முகையதீன் சிஷ்தி | |
---|---|
காஜா முகையதீன் சிஷ்தி அடக்கத்தலம்,அஜ்மீர் தர்கா | |
பிறப்பு | 536 இ.நா. /கி.பி. 1142 [1] சிஸ்தன்[2] |
இறப்பு | ரஜப் மாதம் 6 ம் தேதி633 இ.நா. ˜ மார்ச் 15, கி.பி. 1236 அஜ்மீர் தர்கா அஜ்மீர், ராஜஸ்தான், இந்தியா |
மற்ற பெயர்கள் | Gharib Nawaz |
பணி | இஸ்லாமிய அறிஞர்,தத்துவஞானி,சூபி ஞானி |
காலம் | 12 ஆம் நூற்றாண்டு |
பகுதி | இந்தியத் துணைக்கண்டம் |
காஜா முகையதீன் சிஷ்தி (1141 - 1236) அவர்கள் ஏழைகளின் புரவலர் என பொருள்படும் கரீப் நவாஸ் என்று அழைக்கப்படுகிறார். இவர் தெற்காசியாவில் இருந்த இசுலாமிய சூபி ஞானி, இமாம் , இஸ்லாமிய அறிஞர் மற்றும் தத்துவஞானி ஆவார் . இவர் மூலமே இந்தியத் துணைக்கண்டத்தில் இசுலாமிய சூபியம் அறிமுகப்படுத்தப்பட்டது.[3] பல்வேறு முகலாய பேரரசர்கள் சிஷ்தியை பின்பற்றினர்.[4] இவர் வழியை பின் பற்றுபவர்கள் சிஷ்தியாக்கள் எனப்படுகின்றனர்.
அஜ்மீர் தர்கா
[தொகு]காஜா முகையதீன் சிஷ்தி அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம் அஜ்மீர் தர்கா என்றழைக்கப் படுகிறது.[5] இது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
கலாச்சார அஞ்சலி
[தொகு]காஜா முகையதீன் சிஷ்திக்கு அஞ்சலி செலுத்த 2008 ம் ஆண்டு வெளியான ஜோதா அக்பர் திரைபடத்தில் "காஜா மேரே காஜா" என்ற பாடல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மூலம் இயற்றப்பட்டது. [6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Birth Date". Archived from the original on 2016-06-01. பார்க்கப்பட்ட நாள் 2016-04-22.
- ↑ "Birth Place".
- ↑ Sadarangani, Neeti M. (2004). Bhakti poetry in medieval India : its inception, cultural encounter and impact. New Delhi: Sarup & Sons. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7625-436-3.
- ↑ History of Aurangzeb: Based on Original Sources By Jadunath Sarkar Published by Longmans, Green, 1920, Pg 187 Public Domain
- ↑ "797th Urs of Khawaja Moinuddin Chisty begins in Ajmer". Sify. http://www.sify.com/news/797th-urs-of-khawaja-moinuddin-chisty-begins-in-ajmer-news-national-jguwargfefi.html. பார்த்த நாள்: 18 February 2012.
- ↑ "Jodhaa Akbar Music Review". Planet Bollywood. பார்க்கப்பட்ட நாள் 25 May 2015.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Khwaja Mere Khwaja". Lyrics Translate. பார்க்கப்பட்ட நாள் 25 May 2015.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help)