பாக் குகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக் குகைகள்

பாக் குகைகள் அல்லது புலிக் குகைகள் (Bagh Caves), மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், விந்திய மலைத்தொடரின் அடிவாரத்தில் தார் மாவட்டத்தின் பாக் என்ற ஊரில் அமைந்த ஒன்பது குடைவரை நினைவுச் சின்னங்கள் ஆகும்.[1][2]

குடைவரைக் கட்டிடக் கலையில் அமைந்த இக்குகைகளில் பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் கொண்டுள்ளது.

தற்போது ஐந்து குகைகள் மட்டும் உள்ளது. மணற்கல் பாறைகளில் செதுக்கப்பட்ட இக்குகைச் சுவர்களில் அஜந்தா குகை ஓவியங்கள் போன்ற பௌத்த சமயம் குறித்தான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஐந்து குகைகளில் பிக்குகள் தங்க விகாரங்களும், தியானிக்க சைத்தியங்களும் உள்ளது. குகை எண் 4ன் சுவர்கள் வண்ண வண்ண ஓவியங்கள் கொண்டுள்ளதால் இக்குகையை வண்ண அரண்மனை (ரங்க் மகால்) என அழைக்கிறார்கள்.

இக்குகைகள் சாதவாகன மன்னர்கள் கிபி 5 – 6வது நூற்றாண்டில் வடிவக்கப்பட்டதாகும்.[3]

வட மொழியில் பாக் என்பதற்கு புலி என்று பொருளாகும். பாக் குகைகள், இந்தூர் தொடருந்து நிலையத்திலிருந்து 160 கிமீ தொலைவில் உள்ளது.

ஓவியங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bagh Caves". 2013-09-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-08-10 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2019-05-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-08-10 அன்று பார்க்கப்பட்டது.
  3. Verma, Archana (2007). Cultural and Visual Flux at Early Historical Bagh in Central India, Oxford: Archaeopress, ISBN 978-1-4073-0151-8, p.19

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  1. Pande, Anuapa (2002). The Buddhist Cave Paintings of Bagh, New Delhi: Aryan Books International, ISBN 81-7305-218-2, sumit vyas

ஆள்கூறுகள்: 22°19′21.63″N 74°48′22.36″E / 22.3226750°N 74.8062111°E / 22.3226750; 74.8062111

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Buddhist Caves No.1 to 7 in Bagh
என்பதின் ஊடகங்கள் உள்ளன.



"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்_குகைகள்&oldid=3562480" இருந்து மீள்விக்கப்பட்டது