உள்ளடக்கத்துக்குச் செல்

நாராயண்பூர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 19°43′N 81°15′E / 19.717°N 81.250°E / 19.717; 81.250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாராயண்பூர் மாவட்டம்
नारायणपुर जिला
நாராயண்பூர்மாவட்டத்தின் இடஅமைவு சத்திஸ்கர்
மாநிலம்சத்திஸ்கர், இந்தியா
தலைமையகம்நாராயண்பூர்
பரப்பு6,640 km2 (2,560 sq mi)
மக்கட்தொகை140,206 (2011)
படிப்பறிவு49.59
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

நாராயண்பூர் மாவட்டம் (Narayanpur district) (இந்தி:नारायणपुर जिला) மத்திய இந்தியாவின் சத்திஸ்கர் மாநிலத்தின் இருபத்து ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் நாராயண்பூர் ஆகும்.

நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.[1][2][3]

நிர்வாக வசதிக்காக பஸ்தர் மாவட்டத்தின் சில பகுதிகளை பிரித்தெடுத்து நாராயண்பூர் மாவட்டம் 11 மே 2007-ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் நாராயண்பூர் ஆகும். இம்மாவட்டம் 4,653 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது. இம்மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை பொழிவு 1300 மில்லி மீட்டராகும்.

மாவட்ட எல்லைகள்

[தொகு]

வடக்கில் காங்கேர் மாவட்டம், வடகிழக்கிலும், கிழக்கிலும் கொண்டகவான் மாவட்டம், தெற்கில் தந்தேவாடா மாவட்டம், தென்கிழக்கில் தந்தேவாடா மாவட்டம், மேற்கில் கட்சிரோலி மாவட்டம், மகாராஷ்டிரம், வடமேற்கில் காங்கேர் மாவட்டம் நாராயண்பூர் மாவட்ட எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

பஸ்தர் கோட்டத்தில் உள்ள இம்மாவட்டம் நாராயண்பூர் வருவாய் வட்டம் மற்றும் ஓர்ச்சா வருவாய் வட்டம் என இரண்டு வருவாய் வட்டங்களை கொண்டது. நானூற்று பதின்மூன்று கிராமங்களை கொண்ட இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற நாராயண்பூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஓர்ச்சா ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இம்மாவட்ட மக்கள்தொகையில் எழுபது விழுக்காட்டிற்கு மேல், கோண்ட், மரிய, முரியா, துருவா, பத்ரா மற்றும் ஹல்பா பழங்குடி மக்கள் அதிகம் உள்ளனர்.

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,39,820 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 70,104 மற்றும் பெண்கள் 69,716 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 994 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 30 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 48.62% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 57.31% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 39.88% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 23,358 ஆக உள்ளது.[4]

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 129,161 (92.38 %)ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 776 ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 600 ஆகவும், சமயம் குறிப்பிடாதவர்கள் 165 ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை கணிசமாக உள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Agarwal, Ajay. "Revelations from the red corridor". Archived from the original on 20 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
  3. "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. Archived from the original on 2006-06-22. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
  4. http://www.census2011.co.in/census/district/500-narayanpur.html

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண்பூர்_மாவட்டம்&oldid=3890886" இலிருந்து மீள்விக்கப்பட்டது