கரியாபந்து மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரியபந்து விஷ்ணு கோயில்கள், கிபி 6 - 7ஆம் நூற்றாண்டு
கரியாபந்து மாவட்டம்
गरियाबंद जिला
கரியாபந்துமாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர்
மாநிலம்சத்தீஸ்கர், இந்தியா
நிர்வாக பிரிவுகள்]]ராய்ப்பூர், சத்தீஸ்கர்]]
தலைமையகம்கரியாபந்து
பரப்பு10,863 km2 (4,194 sq mi)
மக்கட்தொகை5,97,653 (2011)
வட்டங்கள்5
மக்களவைத்தொகுதிகள்மகாசமுந்து
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கரியாபந்து மாவட்டம் (Gariaband District) மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். ராய்ப்பூர் கோட்டத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். சனவரி 2012-ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் கரியாபந்து மாவட்டமும் ஒன்றாகும்.[1]

இம்மாவட்டம் ராய்ப்பூர் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 1 சனவரி 2012 அன்று புதிதாக துவக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கரியாபந்து நகரம். ஆகும். அருகில் உள்ள நகரங்கள் மகாசமுந்து மற்றும் ராஜிம் ஆகும். கரியாபந்து நகரம், மாநிலத் தலைநகரம் ராய்ப்பூரிலிருந்து 93 கி. மீ., தொலைவில் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

10,863 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கரியபந்து மாவட்டம் 5 வருவாய் வட்டங்கள், 336 கிராம ஊராட்சிகள் மற்றும் 710 கிராமங்களைக் கொண்டது. 2017-இல் இதன் மக்கள் தொகை 5,97,653 ஆகும். அதில் ஆண்கள் 2,95,851 மற்றும் பெண்கள் 3,01,802 ஆகவுள்ளனர். இம்மாவட்டத்தின் அலுவல் மொழி இந்தி மொழி ஆகும்.

மாவட்ட எல்லைகள்[தொகு]

இம்மாவட்டத்தின் வடக்கில் மகாசமுந்து மாவட்டமும், கிழக்கிலும், தெற்கிலும் ஒரிசா மாநிலமும் மற்றும் மேற்கில் தம்தரி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரியாபந்து_மாவட்டம்&oldid=3514810" இலிருந்து மீள்விக்கப்பட்டது