கரியாபந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரியாபந்து விஷ்ணு கோயில்கள், காலம், கிபி 6-7-ஆம் நூற்றாண்டு
கரியாபந்து
நகரம்
கரியாபந்து is located in சத்தீசுகர்
கரியாபந்து
கரியாபந்து
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் கரியாப்ந்து நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 20°38′00″N 82°03′40″E / 20.63333°N 82.06111°E / 20.63333; 82.06111ஆள்கூறுகள்: 20°38′00″N 82°03′40″E / 20.63333°N 82.06111°E / 20.63333; 82.06111
நாடு இந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
மாவட்டம்கரியாபந்து
அரசு
 • நிர்வாகம்நகராட்சி
ஏற்றம்318 m (1,043 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்10,517
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி, சத்திசுகரி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்493889
தொலைபேசி குறியீடு07706
வாகனப் பதிவுCG-23
இணையதளம்gariaband.gov.in

கரியாபந்து (Gariaband), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் மத்திய கிழக்கில், ஒடிசா எல்லையை ஒட்டிய கரியாப்ந்து மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். பைரி ஆற்றின் கரையில் அமைந்த கரியாபந்து நகரத்தில் கிபி ஆறாம் நூற்றாண்டின், விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட பூதேஸ்வர் நாத் கோயில் உள்ளது.

அமைவிடம்[தொகு]

மகாசமுந்து நகரத்திற்கு தெற்கே 80 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் கரியாபந்து உள்ளது.

பெயர்க் காரணம்[தொகு]

கரியாபந்து எனில் மலைகளால் சூழப்பட்ட நிலப்பரப்பு எனப்பொருளாகும்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 15 வார்டுகளும் 2,448 வீடுகளும் கொண்ட கரியாப்ந்து பேரூராட்சியின் மக்கள் தொகை 10,517 ஆகும். அதில் 5,233 ஆண்கள் மற்றும் 5,233 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1010 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.32% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.49% ஆகவுள்ளது.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 88.11%, இசுலாமியர் 9.74%, பௌத்தர்கள் 0.38%, சமணர்கள் 0.32%, சீக்கியர்கள் 0.27%, கிறித்தவர்கள் 0.87% மற்றும் பிறர் 0.31% ஆகவுள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரியாபந்து&oldid=3514822" இருந்து மீள்விக்கப்பட்டது