சித்திரகூட அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்திரகூட அருவி
चित्रकोट प्रपात
இரவில் சித்திரகூட அருவி
Map
அமைவிடம்ஜெகதல்பூர், சத்தீஸ்கர்
ஆள்கூறு19°12′23″N 81°42′00″E / 19.206496°N 81.699979°E / 19.206496; 81.699979
வகைஅருவி
மொத்த உயரம்29 மீட்டர் (95 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கைமூன்று
நீர்வழிஇந்திராவதி ஆறு

சித்திரகூட அருவி (Chitrakot Falls) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்திலுள்ள மேற்கு சகதல்பூரில் அமைந்திருக்கும் ஓர் அருவி ஆகும். இது சகதல்பூருக்கு மேற்கே 38 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி 29 மீட்டர் (95 அடி) உயரம் உடையது.[1][2] சித்ரகூட நீர்வீழ்ச்சி இந்திராவதி ஆற்றில் அமைந்துள்ள இயற்கை நீர்வீழ்ச்சியாகும். சூரிய ஒளிக்கு ஏற்ப இந்த நீர்வீழ்ச்சியின் வண்ணம் மாறுகிறது.[3] பருவகாலங்களில்  இந்த நீர்வீழ்ச்சி அதிகமான அகலத்தைக் கொண்டிருக்கும். இந்தியாவின் மிக அகலமான அருவியும் இதுவேயாகும்.[4] இந்த அருவி பருவகாலங்களில் காணும் தோற்றத்தின் அடிப்படையில் இந்தியாவின் நாயகரா என அழைக்கப்படுகிறது.[5]

சித்திரகூட அருவியின் அகலப்பரப்புக் காட்சி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திரகூட_அருவி&oldid=3614990" இருந்து மீள்விக்கப்பட்டது