ஜெகதல்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெகதல்பூர்
जगदलपुर
மாநகராட்சி
அடைபெயர்(கள்): தெருக்களின் நகரம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Chhattisgarh" does not exist.
ஆள்கூறுகள்: 19°04′N 82°02′E / 19.07°N 82.03°E / 19.07; 82.03ஆள்கூற்று: 19°04′N 82°02′E / 19.07°N 82.03°E / 19.07; 82.03
நாடு இந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
மாவட்டம்பஸ்தர் மாவட்டம்
அரசு
 • வகைமாநகராட்சி
 • Bodyஜெகதல்பூர் மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்29
பரப்பளவு தரவரிசை4th
ஏற்றம்552
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்3
 • தரவரிசை4வது இடம்
 • அடர்த்தி11
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி
 • வட்டார மொழிகள்ஹல்பி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்494001 & 494002
தொலைபேசி குறியீட்டென்07782-xxxxxx
வாகனப் பதிவுCG-17
இணையதளம்www.bastar.gov.in


ஜெகதல்பூர் (Jagdalpur) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் கோட்டத்தில் உள்ள பஸ்தர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியுமாகும்.

ஜெகதல்பூர் நகரம் துணி வணிகத்தில் ஒரு பெரிய முனையாகும். எனவே இந்நகரத்தை சின்ன இந்தூர் என அழைப்பர். பஸ்தர் கோட்டத்தில் மட்டுமல்லாமல், ஒரிசா மற்றும் தென்னிந்தியாவின் பெரிய துணி சந்தையாக ஜெகதல்பூர் விளங்குகிறது.

சுற்றுலா[தொகு]

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுற்றுலாத் தலைநகராக ஜெகதல்பூர் விளங்குகிறது. ஜெகதல்பூர் பசுமையான இயற்கை காடுகள் சூழ்ந்த மலை அருவிகள், குகைகள், இயற்கைப் பூங்காக்கள், இயற்கை ஆதாரங்கள், மூலிகைச் செடி கொடிகள், உணர்ச்சி பொங்கும் திருவிழாக்கள் கொண்ட நகரமாகும். மேலும் இந்நகரத்தின் அருகில் கங்கேர் கட்டி தேசியப் பூங்கா, கோட்டும்சர் குகை, கைலாச குகைகள் சுற்றுலா பயணிகளை கவரதக்க வகையில் உள்ளது.[1]

மக்கள் தொகையியல்[தொகு]

2016-ஆம் ஆண்டு கணக்குப் படி ஜெகதல்பூர் மாநகரத்தின் மொத்த மக்கள் தொகை 2,90,478 ஆக உள்ளது.[2] பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 985 பெண்கள் வீதம் உள்ளனர். மேலும் மொத்த மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் விழுக்காடு 19% உள்ளது. சராசரி படிப்பறிவு 90.44% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 92.51% ஆகவும்; பெண்களின் படிப்பறிவு 88.37% ஆகவும் உள்ளது.

தொழில்[தொகு]

ஜெகதல்பூர் நகரத்திலிருந்து 16 கி மீ தொலைவில் நிறுவப்பட்ட 21,000 கோடி மதிப்புள்ள நகர்னார் இரும்பு ஆலை திசம்பர் 2016 முதல் செயல்பட உள்ளது. [3] ஜெகதல்பூரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள் 19,500 கோடி மதிப்பிலான டாடா நிறுவனத்தின் இரும்பாலை ஆண்டுக்கு 5.5 மில்லியன் டன் இரும்பு தளவாட உற்பத்தி செய்கிறது.[4]

போக்குவரத்து[தொகு]

சாலைகள்[தொகு]

ஜெகதல்பூர் பேருந்து நிலையத்திலிருந்து மாநிலத்தின் அனைத்து நகரங்களுக்கும் மற்றும் அருகில் உள்ள ஒரிசா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களின் நகரங்களுக்கும் செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உள்ளது.

தொடருந்து[தொகு]

புவனேஸ்வர் - ஜெகதல்பூர் செல்லும் ஹிராகண்ட் விரைவு தொடருந்து வண்டியின் (BBS-Jagdalpur) வழித்தடம்

ஜகதல்பூர் தொடருந்து நிலையம், சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர், துர்க் நகரங்களையும், ஒரிசாவின் புவனேஸ்வர், கட்டக், கோராபுட் நகரங்களையும், ஆந்திராவின், விஜயநகரம், விசாகப்பட்டினம் நகரங்களையும், மேற்கு வங்காளத்தின் ஹவுரா நகரத்தை இணைக்கும் ஒற்றை இருப்புப்பாதை கொண்டுள்ளது.[5]

திருவிழாக்கள்[தொகு]

ஜெகதல்பூர் நகரத்தில் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில் நவராத்திரி, இரத யாத்திரை, மகாசிவராத்திரி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை, மாங்கனித் திருவிழாவும் அடங்கும்.[6]

தட்ப வெப்பம்[தொகு]

மார்ச் முதல் மே மாதம் வரை கடும் கோடைகாலமும்; சூன் முதல் செப்டம்பர் வரை மழைக்காலமும்; நவம்பர் முதல் பிப்ரவரி முடிய குளிர்காலமும் கொண்டது ஜெகதல்பூர் நகரம்.

தட்பவெப்ப நிலைத் தகவல், ஜெகதல்பூர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32.9
(91.2)
35.9
(96.6)
39.6
(103.3)
42.5
(108.5)
44.8
(112.6)
42.6
(108.7)
35.9
(96.6)
33.4
(92.1)
34.0
(93.2)
33.9
(93)
33.0
(91.4)
31.5
(88.7)
44.8
(112.6)
உயர் சராசரி °C (°F) 28.3
(82.9)
31.2
(88.2)
35.1
(95.2)
37.6
(99.7)
38.1
(100.6)
33.4
(92.1)
28.9
(84)
28.4
(83.1)
29.8
(85.6)
30.0
(86)
28.5
(83.3)
27.6
(81.7)
31.41
(88.54)
தினசரி சராசரி °C (°F) 19.9
(67.8)
23.0
(73.4)
26.9
(80.4)
30.0
(86)
31.2
(88.2)
28.5
(83.3)
25.7
(78.3)
25.4
(77.7)
25.9
(78.6)
24.7
(76.5)
21.7
(71.1)
19.5
(67.1)
25.2
(77.36)
தாழ் சராசரி °C (°F) 11.5
(52.7)
14.7
(58.5)
18.6
(65.5)
22.3
(72.1)
24.3
(75.7)
23.6
(74.5)
22.4
(72.3)
22.3
(72.1)
21.9
(71.4)
19.4
(66.9)
14.8
(58.6)
11.3
(52.3)
18.93
(66.07)
பதியப்பட்ட தாழ் °C (°F) 2.8
(37)
7.0
(44.6)
8.3
(46.9)
14.8
(58.6)
17.0
(62.6)
14.3
(57.7)
18.3
(64.9)
19.3
(66.7)
17.4
(63.3)
11.0
(51.8)
5.9
(42.6)
4.4
(39.9)
2.8
(37)
மழைப்பொழிவுmm (inches) 7
(0.28)
11
(0.43)
12
(0.47)
44
(1.73)
90
(3.54)
295
(11.61)
352
(13.86)
367
(14.45)
200
(7.87)
87
(3.43)
26
(1.02)
4
(0.16)
1,495
(58.86)
ஈரப்பதம் 59 51 42 43 47 69 84 86 82 74 68 65 64.2
சராசரி மழை நாட்கள் 0.8 1.5 1.6 4.5 6.8 13.8 20.5 21.1 15.4 6.8 2.2 0.6 95.6
ஆதாரம்: NOAA (1971-1990)[7]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகதல்பூர்&oldid=2481178" இருந்து மீள்விக்கப்பட்டது