பைலாடிலா மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பைலாடிலா மலைத்தொடர்
பைலாடிலா மலைத்தொடர் is located in Chhattisgarh
பைலாடிலா மலைத்தொடர்
சத்தீசுகரில் பைலாடிலா மலைத்தொடரின் அமைவிடம்
உயர்ந்த இடம்
Peakபெயரிடப்படாத மலை (தந்தேவாடா மாவட்டம், சத்தீசுகர், இந்தியா)
உயரம்1,276 m (4,186 ft)
பட்டியல்கள்இந்திய மாநிலங்களில் உயரமா புள்ளிகளின் பட்டியல்
Dimensions
நீளம்70 km (43 mi) SW-NE
அகலம்25 km (16 mi) NW-SE
புவியியல்
Countryஇந்தியா
Stateசத்தீசுகர்
Range coordinates18°42′00″N 81°13′10″E / 18.70000°N 81.21944°E / 18.70000; 81.21944ஆள்கூறுகள்: 18°42′00″N 81°13′10″E / 18.70000°N 81.21944°E / 18.70000; 81.21944
Climbing
Easiest routeமலையேறுதல்

பைலாடிலா மலைத்தொடர் (Bailadila Range) என்பது கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து சுமார் 200 கி.மீ மேற்கே தக்காண மேட்டு நிலத்தில் அமைந்த ஒரு மலைத்தொடராகும். இது இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் தாண்டிவாடா மாவட்டத்தில் உள்ள கிராந்துல் நகருக்கு அருகில் அமைந்துள்ளது[2]. காளையின் திமில் போல காட்சியளிப்பதால் இம்மலைத்தொடருக்கு பைலாடிலா மலைத்தொடர் என பெயர் தருவிக்கப்பட்டுள்ளது.

சத்தீசுகரின் உயரமான புள்ளி[தொகு]

தக்காண மேட்டுநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் பைலாடிலா மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்திராவதி ஆற்றுக்குத் தெற்கே 70 கிலோமீட்டர் நீளத்துடன் 1276 மீட்டர் உயரத்துடன் கிட்டத்தட்ட தென்மேற்கு-வடகிழக்கு திசைநோக்கி இம்மலை நீண்டுள்ளது [3]. சத்தீசுக்கரிலுள்ள மிக உயர்ந்த மலை உச்சிகளில் இதுவும் ஒன்றாகும். இம்மலைகள் தந்தேவாடா மாவட்டத்தின் தலைமையிடமான தந்தேவாடாவி ற்கு தென்மேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது [4]. செழித்து இருந்தன. முன்னர் பைலாடிலா மலைச் சரிவுகளில் அடர்ந்த மரங்கள் செழித்து இருந்தன ஆனால் மலைத்தொடரில் சுரங்கப் பணி நடைபெற்று தரமான இரும்புத் தாது வெட்டியெடுக்கப்படும் தொழில் வளர்ச்சியடைந்த காரணத்தால் இம்மலையின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன[5].

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைலாடிலா_மலைத்தொடர்&oldid=2780787" இருந்து மீள்விக்கப்பட்டது