இந்திராவதி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திராவதி ஆறு (ஆங்கிலம்: Indravati River, இந்தி: इंद्रावती नदी, மராத்தி: इन्द्रावती,ஒரியா: ଇନ୍ଦ୍ରାବତୀ ନଦୀ, தெலுங்கு: ఇంద్రావతి నది) கோதாவரி ஆற்றின் கிளை ஆறு ஆகும். இது மத்திய இந்தியாவில் ஓடுகிறது. இந்த ஆறு ஒடியாவிலுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையின் தண்டகாரண்ய மலைத் தொடரில் உற்பத்தியாகிறது. இது சத்தீசுகர், மகாராட்டிரம் மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் கோதாவரி ஆற்றுடன் கலக்கிறது. மகராட்டிரத்திற்கும், சத்தீசுகருக்கும் இடையே பல இடங்களில் இந்த ஆறே எல்லையாக உள்ளது. இந்தியாவின் மிகவும் பசுமையான மாவட்டமாக அறியப்படும் பாஸ்டர் வழியாகச் செல்கிறது. இம்மாவட்டம் ஒடியாவுக்கு அடுத்து அமைந்துள்ளது. இவ்வாற்றங்கரையில் அடந்த காடுகள் உள்ளன. இதன் மொத்த நீளம் 535 கிலோமீட்டர்களும் நீர்ப்பிடிப்புப் பகுதி 41,665 சதுர கிலோமீட்டர்களும் ஆகும். இவ்வாற்றின் குறுக்கே 5 நீர்மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வழியில் புகழ்பெற்ற குதிரை லாட அருவியான சித்ரகோடே அருவி உள்ளது .பாசுடர் மாவட்டத்தின் உயிர் நாடியாக இந்த ஆறு கருதப்படுகிறது

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திராவதி_ஆறு&oldid=2550014" இருந்து மீள்விக்கப்பட்டது