நூவாபடா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நூவாபடா மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் நூவாபடா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

புவியியல்[தொகு]

நுபாடா மாவட்டம் ஒடிசாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது அட்சரேகை 20 ° 0 'N மற்றும் 21 ° 5' க்கும், தீர்க்கரேகை 82 ° 20 'E மற்றும் 82 ° 40' E க்கும் இடையில் உள்ளது. இதன் எல்லைகள் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கில் சத்தீஸ்கர் மகாசமுந்து மாவட்டம் வரையிலும், கிழக்கில் பார்கர், பாலாங்கிர் மற்றும் கலஹந்தி மாவட்டங்கள் வரையும் காண்படுகின்றன. இந்த மாவட்டத்தின் பரப்பளவு 3407.5 கிமீ² ஆகும். இதன் நிர்வாக தலைமையகம் நுவாபாடா ஆகும்.

பொருளாதாரம்[தொகு]

எந்தவொரு தொழிற்துறையும் நடவடிக்கைகளும் பெருமளவில் நடைபெறாததால் பொருளாதாரம் விவசாய நடவடிக்கைகளைச் சுற்றி வருகிறது. மூன்று பெரிய நீர்ப்பாசன திட்டங்கள் - அப்பர் ஜொங்க், சுந்தர் அணை மற்றும் வரவிருக்கும் லோயர் இந்திரா பாசன திட்டம் - 45,000 ஏக்கர் நிலத்திற்கு ஆதரவை வழங்குகின்றன. முழு மாவட்டத்திலும் நெற் பயிர்ச் செய்கை பிரதானமாக நடைபெறுகின்றது. சோளம் (மக்காச்சோளம்), பருத்தி, வெங்காயம் போன்ற பிற பயிர்கள் சாகுபடியில் பயிர்களில் பெரும் பங்கைக் கொண்டுள்ளன. அறுவடை காலம் முடிந்ததும் ஒவ்வொரு ஆண்டும் 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிற வேலை வாய்ப்புகளைத் தேடி மற்ற மாநிலங்களுக்கு குடிபெயர்கின்றன. 2006 ஆம் ஆண்டில்  பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் நாட்டின் 250 பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும் துரிவு செய்தது.[2]  தற்போது ஒடிசாவில் உள்ள 19 மாவட்டங்களில் இது பின்தங்கிய பிராந்திய மானிய நிதி திட்டத்திலிருந்து (பிஆர்ஜிஎஃப்) நிதி பெறுகிறது.[2]

வரலாறு[தொகு]

நுவாபாடா மாவட்டம் 1993 மார்ச் ஆரம்பம் வரை கலஹந்தி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் நிர்வாக வசதிக்காக களாஹாண்டி மாவட்டம் களாஹாண்டி மற்றும் நுவாபாடா என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது.[3] இப்போது துணைப்பிரிவான நுவாபாடா மாவட்டம், ஐந்து தெஹ்ஸில்களான நுவாபாடா, கோமனா, கரியார், சினப்பள்ளி மற்றும் போடன் என்பவற்றையும், மற்றும் ஐந்து சமூக மேம்பாட்டு தொகுதிகளான கரியார், சினப்பள்ளி, போடன், நுவாபாடா மற்றும் கோம்னா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. [சான்று தேவை]

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி நுபாடா மாவட்டத்தில் 610,382 மக்கள் வசிக்கின்றனர்.[4] இந்த சனத்தொகை சாலமன் தீவு[5] அல்லது அமெரிக்காவின் வயோமிங் மாநிலத்திற்கு சமனாகும்.[6] இந்தியாவின் 640 மாவட்டங்களில் இந்த மாவட்டம் 524 வது இடத்தைப் பெறுகிறது. மாவட்டத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு (410 / சதுர மைல்) 157 மக்கள் அடர்த்தி உள்ளது. 2001–2011 காலப்பகுதியில் சனத்தொகை வளர்ச்சி விகிதம் 14.28% ஆகும். நுபாடாவில் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 1020 பெண்கள் என்ற பாலின விகிதம் காணப்படுகிறது. மக்களின் கல்வியறிவு விகிதம் 58.2% ஆகும். 2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி போது மாவட்டத்தில் 81.75% வீதமானோர் ஒடியா மற்றும் 16.98% வீதமானோர் இந்தி மொழியையும் முதன்மை மொழியாக கொண்டிருந்தனர்.[7]

பிற ஊடகங்களில்[தொகு]

நுவாபடா (களாஹாண்டியின் நிர்வாகத்தின் கீழ்) அம்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பனாஸ் புஞ்சி என்ற பழங்குடிப் பெண் தனது பதின்ம வயதான வயதான மைத்துனியான பனிதாவை வேலையற்ற குருடனுக்கு நாற்பது ரூபாய்க்கும் சேலையொன்றுக்கும் விற்றதாக செய்தி வெளியானது.[8] இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்போதைய பிரதமரான ராஜீவ் காந்தி கிராமத்திற்கு விஜயம் செய்தார்.[9] இந்த சம்பவம் ஒடிசா நாட்டுப்புற கதைகளின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.[10]

உட்பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை நூவாபடா, கோம்னா, போதேன், சினாபல்லி, கடியாள் ஆகியன.

இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு நூவாபடா, கடியாள் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் களாஹாண்டி மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூவாபடா_மாவட்டம்&oldid=3319258" இருந்து மீள்விக்கப்பட்டது